நிஜமென கொக்கரித்து
நிஜத்தை விழுங்கிவிட
எத்தனித்த நிழல்
நிதர்சனம் தன்னிலையில்
பிறழாமல் ஒரேநிலையில் நிற்க
ஒளிவிழும் தன்மைக்கேற்பவும்
நிற்கும் மேடு பள்ளத்தின்
தகுதிக்கேற்பவும் தன்னைத்தானே
தன்னிலையை நீட்டி முழக்கி
பன்முகம் காட்டினாலும்
தடுமாறித்தான் போகிறது நிழல்.
நிஜத்தின் நீட்சிமத்தை
இயல்பின் இருப்பு
நிதர்சனமாக காட்டும்
நிழலின் நீள அகலத்தை
ஒளிகாட்டும் கோணம்
பிம்பமாக காட்டும்
தனக்கான தனித்த
வண்ணங்கள் கொண்ட
நிஜத்தின் நிழலில்
வாழும் நிழல்கள்
நிறம் மட்டும் மாறுவதே இல்லை
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment