அன்றாடம் விடிந்தாலும்
அதிகாலை விடியலொன்றில்
கண்டெழுந்த கனவில்
உடுத்தியிருந்த
பட்டும் பீதாம்பரமும்
அணிந்திருந்த
பொன்னில் பதித்த
வைடூர்ய அணிகலனும்
தரித்திருந்த மணிமுடியும்
பிடித்திருந்த செங்கோலும்
அறிவாளிகளும் சேனாதிபதிகளும்
அமர்ந்திருந்த ராஜசபையும்
ஆட்சியையும் அதிகாரமும்
அப்படியே காட்சியாய் இருந்தது
ஆனால் அவன் மட்டும்
நிதர்சனத்தில்
அவை ஏதும் இல்லாத
இந்நாட்டு மன்னனாய்
ஆளப்பட்டுக் கொண்டிருந்தான்
ஆம் என்பதற்கும்
இம் என்பதற்கும்
வண்டி வண்டியாய்
வரிகள் செலுத்தி
ஒடுக்கப்பட்டு இருந்தான்.
ராஜா வாவுபிள்ளை
No comments:
Post a Comment