வேலுநாச்சியாருக்கு ஹைதர் அலி செய்த உதவிகளில்.. ஆங்கிலேயரை எதிர்க்க வேலுநாச்சியாருக்கு உதவிட.. ஹைதர் அலி.. தன் மகன் திப்புவையே படைத்தளபதியாக்கி அனுப்பி வைத்தார்.
வேலுநாச்சியாரின் கணவரின் படுகொலைக்குப் பின் அவருக்கு அடைக்கலம் அளித்தது.. மைசூர் அரசு.
விருப்பாச்சி நாயக்கரின் பராமரிப்பில் .. வேலுநாச்சியாரை ஒப்படைத்த ஹைதர் அலி.. இவள் என் மகள்.. என் மகளைப் பாதுகாப்பது போல் நீர் பாதுகாக்க வேண்டும் என்றதோடு நில்லாமல்.. வேலுநாச்சியாரின் உதவிக்கு 3000 படையணிகளைக் கொடுத்துதவினார் ஹைதர் அலி.
தாழ்த்தப்பட்ட மக்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுத்த பார்ப்பணர்களை நாடு கடத்தியவர் வேலு நாச்சியார்.
வேலுநாச்சியார்.. இராமநாதபுரத்து மண்ணின் மகள். தனது அப்பா செல்ல முத்து சேதுபதியிடம் குதிரை வாங்கிக் கேட்கிறார். சேதுபதி ஒற்றைக் குதிரை வாங்கி வர மதுரைக்கு ஆள் அனுப்புகிறார். இப்படிப்பட்ட நிலையில் உள்ள சாம்ராஜ்யத்திற்கு உதவிட.. ஹைதர் அலி 12 பீரங்கி வண்டி.. நூற்றுக்கணக்கான துப்பாக்கி ஏந்திய வீரர்கள்... மற்றும் குதிரைப்படையும் அடக்கம். தன் மகனையே தளபதியாக்கி அனுப்பி வைத்த வீரம்.. வரலாற்றில் எங்கும் தேடக் கிடைக்காத.. நட்பின் இலக்கணம். ஒரு பெண்ணுக்கு இரங்கிய ஈகைக் குணம்.
பதிவு ;
ஹமீது முகமது
சுவனப்பிரியன்
No comments:
Post a Comment