அப்துல் கபூர்
இதயத் தளங்களில்
கனிய வைத்து
மணம் பரப்புகிற
இனிய வாழ்த்துக்களை
உரித்தாக்கி மகிழ்கிறேன் ....
புதிய வருடமதில்
வல்லோன் அல்லாஹ்
பணிக்கிற கட்டளைக்கு
பயணிக்கிற நாட்கள்
நலமாய் அமையட்டும் ....
இறையருள் பொழியட்டும்
வளங்கள் கொழிக்கட்டும்
உளங்கள் மகிழட்டும்
களங்கள் ஒளிரட்டும் ....
அன்பு நிலவட்டும்
பண்பு உலவட்டும்
மாண்பு பரவட்டும்
உறவுகள் இணையட்டும்
காழ்ப்புணர்வு அணையட்டும் ...
புன்னகை மலரட்டும்
பொறாமை உலரட்டும்
நேசங்கள் புலரட்டும்
எண்ணங்கள் ஈடேறட்டும்
சந்திப்புகள் இனிக்கட்டும் ....
ஆசைகள் நிறைவேறட்டும்
நட்பு தழைக்கட்டும்
உடல் உழைக்கட்டும்
குடும்பம் பிழைக்கட்டும்
வாழ்க்கை மணக்கட்டும் ....
அறிவு செழிக்கட்டும்
ஆரோக்கியம் நிலைக்கட்டும்
ஆற்றல் பெருகட்டும்
கவலைகள் கலையட்டும்
வம்புகள் தொலையட்டும் ....
இன்பங்கள் தழுவட்டும்
துன்பங்கள் நழுவட்டும்
கொடுமைகள் அழியட்டும்
சைத்தானியம் ஒழியட்டும்
இறையச்சம் வழியட்டும் ....
அப்துல் கபூர்
No comments:
Post a Comment