வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள்!
✅ உலகப்பேரழகி கிளியோபாட்ராவின் கல்லறை வாசகம்.
"உலகத்திலேயே அழகானப் பிணம் இங்கே உறங்கிக்கொண்டு இருக்கிறது. நல்ல வேளை இவள் பிணமானாள், இல்லாவிட்டால் இந்தக் கல்லறைக்குள் ரோமாபுரி சாம்ராஜ்யமே பிணமாகியிருக்கும்."
✅ மகா அலெக்சாண்டரின் கல்லறை வாசகங்கள்*.
"இந்த உலகம் முழுவதுமே போதாது என்று சொன்னவனுக்கு , இந்தக் கல்லறைக் குழி போதுமானதாக ஆகிவிட்டது."
✅ ஒரு தொழிலாளியின் கல்லறை வாசகம்.
"இங்கே புதை குழியில் கூட இவன் கறையான்களால் சுரண்டப்படுகிறான்."
✅ அரசியல்வாதியின் கல்லறையில்*,
"தயவு செய்து இங்கே கை தட்டி விடாதீர்கள், இவன் எழுந்து விடக்கூடாது."
✅ ஒரு விலை மகளின் கல்லறை வாசகம்.*
"இங்கு தான் இவள் தனியாகத் தூங்குகிறாள், தொந்தரவு செய்யாதீர்கள், பாவம் இனி வர முடியாது இவளால்."
✅ இவ்வளவு தானா வாழ்க்கை?
✅ ஆம் அதிலென்ன சந்தேகம். ஆனானப்பட்டவர்களின் ஆட்டமெல்லாம் அடங்கிப்போனது அடையாளம் தெரியாமல். உலகையே நடுங்க வைத்த *ஹிட்லர்* தன் சாவைக்கண்டு நடுங்கி ஒடுங்கி அடங்கிப்போனான். அவனோடு கூட்டு சேர்ந்து சர்வாதிகார ஆட்டம் போட்ட *முசோலினி* இறந்த போது ரஷ்ய தலை நகரில் முசோலினியின் பிணத்தை தலைகீழாக தொங்க விட்டு ஒரு வாரம் வரை அத்தனை பொதுமக்களும் தங்களது செறுப்பால் அந்தப் பிணத்தை அடித்து தங்கள் மனக்குமுறலை தீர்த்துக் கொண்டார்கள். இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.ஆணவக்காரர்கள் அடங்கிப்போன கதைகளை.
✅ நாம் எதை ஆதாரமாக வைத்து ஆணவப்படுகிறோம்
✅ நமது பதவியா?
✅ நாம் சேர்த்த சொத்து சுகங்களா?
✅ நமது படிப்பா?
✅ நமது வீடா?
✅ நம் முன்னோர்களின் ஆஸ்தியா?
✅ நமது அறிவா?
✅ நமது பிள்ளைகளா?
✅ எது நம்மைக் காப்பாற்றப் போகிறது?
✅ ரத்தம் சுருங்கி, நமது சுற்றமெல்லாம் ஒதுங்கிய பின் எதுவுமே நம்மை காப்பாற்றப் போவதில்லை.
✅ பசித்தவனுக்கு உணவு கொடுத்து, உடை இல்லாதவனுக்கு உடை கொடுத்து, எல்லாரையும் நேசித்து , மனத் தூய்மையான வாழ்க்கையை வாழுபவர்கள் மட்டுமே என்றென்றும் வாழ்பவர்கள்.
✅ கேவலம் அற்ப சுகங்களுக்காக தமது வாழ்க்கையை பாழாக்கிக்கொள்ளும் ஆண்களும், பெண்களும் பெருகி வரும் சமூகத்தில் வாழும் நாம் எச்சரிக்கையோடு நம்மை காத்துக்கொள்ள வேண்டும்.
✅ ஒரே முறை வாழப்போகிறோம் , எதை விதைக்கிறோமோ அதைத்தான் பல நூறு மடங்காக அறுவடை செய்யப்போகிறோம்.
✅ நல்ல செயல்களை, எண்ணங்களை விதைப்போம். அளவில்லா மகிழ்ச்சியோடு அறுவடை செய்வோம் நன்மைகளை ஆயிர மடங்காக.
✅ பிறரை வாழ வைத்து வாழ்வோம். ✅
அனைவருக்கும் பகிருங்கள்!✅ உங்கள் வாழ்க்கையின் அர்த்தம் புரிந்துகொள்ளுங்கள்! படித்தபின் பகிருங்கள்!
No comments:
Post a Comment