Tuesday, November 28, 2017

மிகவும் சுருக்கமான மற்றும் அதி சக்தியுள்ள துஆ-அதைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?



மிகவும் சுருக்கமான மற்றும் அதி சக்தியுள்ள துஆ-அதைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?

நபி (ஸல்) அவர்களிடம் அவருடைய சிறிய தந்தையான அல் அப்பாஸ் அவர்கள் கூறினார்கள்:

யா ரஸுலுல்லாஹ் எனக்கு ஒரு துஆவை கற்பியுங்கள் என்றார். அதற்கு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் என்னுடைய சிறிய தந்தையே, கூறுங்கள்

اللهم اني اسالك العافية

"அல்லாஹும்ம இன்னி அஸ்அலுக அல் ஆஃபியா"

(யா அல்லாஹ்! நான் உன்னிடம் ஆஃபியாவைக் கேட்கிறேன்)


ஆகவே இப்பொழுது ஆஃபியா  என்றால் என்ன?

ஆஃபியாவின் பொருளானது   எல்லாவித தொந்தரவுகளிலிருந்தும் என்னைக் காப்பாற்று"

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்கள் என்றால் ஆஃபியாவில் இருக்கின்றீர்கள் என்பதாகும்.

வாழ்வதற்கு போதிய பணம் இருக்குமானால் நீங்கள் ஆஃபியாவில்" இருக்கிறீர்கள்

உங்களது குழந்தைகள் பாதுகாக்கப்பட்டதாக இருந்தால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள். மேலும் நீங்கள் தண்டிக்கப்படாமல் மன்னிகப்பட்டவரானால் நீங்கள் ஆஃபியாவில் இருக்கிறீர்கள்

  *ஆஃபியாவின்* பொருள்

யா அல்லாஹ்! என்னை வேதனையிலிருந்தும் துன்பத்திலிருந்தும் பாதுகாப்பாயாக. இது துன்யாவையும் ஆகிராவையும் சேர்த்தே குறிக்கும்.

அல் - அப்பாஸ் அவர்கள் இதைப்பற்றி சிந்தித்துவிட்டு, சில நாட்களுக்கு பிறகு திரும்பி வந்து கூறினார்கள்:

"யா ரஸூலுல்லாஹ்! இந்த துஆ பார்ப்பதற்கு கொஞ்சம் சுருக்கமாக தெரிகிறது. எனக்கு வேறு ஏதாவது பெரியதாக வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்:

என்னுடைய நேசத்திற்குரிய சிறிய தந்தையே, அல்லாஹ்விடம் ஆஃபியாவை கேளுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக ஆஃபியாவைவிட சிறந்ததாக நீங்கள் எதையும் பெறமாட்டீர்கள்.

இது மிகவும் எளிமையான துஆ. நீங்கள் கூறுவதன் உண்மையான பொருளானது

யா அல்லாஹ் நான் உன்னிடம் சகல விதமான துன்பத்தைவிட்டும்,கேடுகளை விட்டும், ஆழந்த துக்கத்தைவிட்டும், கஷ்டத்தைவிட்டும்,பாதுகாப்பு தேடுகிறேன். என்னை சோதிக்காதே!

இதெல்லாம் "அல்லாஹும்ம இன்னி அஸ்ஆலுக அல் - ஆஃபியா என்பதில் உள்ளடங்கிவிடும்.

🔋ரியாத் அஸ் ஸாலிஹீன், ஸுனன் திர்மிதி .
[11/28, 10:01 AM] ‪+91 94441 88160‬: தரீக்கா ஞானப்பாதை உங்களை வழி நடத்தும் விதம் நீங்கள் நினைப்பதுபோல், நடப்பதுபோல் இல்லை முற்றிலுமாக மாற்றமானது. தரீக்கா ஞானப்பாதை அனைத்தும் உங்கள் சுயம் சார்ந்த உள்ளொளி பயணம் அங்கே பாதையும் நீங்களே பயணமும் நீங்களே பயணியிம் நீங்களே. உள்ளும் வெளியும் நீங்கள்தான்.

இறை வணக்கத்தில் இருக்கிறவர்களை பாருங்களே ஒரு முனையில் இறை இல்லத்திலும் மறு முனை வெளியிலும் இருப்பார்கள். அதாவது தேடுபவர் இறை இல்லத்தில் (உடல்) இருப்பார் ஆனால் அவர் உயிர் மனம் ஆன்மா அனைத்தும் வெளி உலகில் இருக்கும். சிலநேரங்களில் நடந்துக் கொண்டும், கடைவீதியில் போய்க் கொண்டும், பிறரிடம் பேசிய கொண்டும், இப்படி பல நிலைகளில் இறைவணக்கம் திக்ரு  இருக்கும் இது தவறு என்று இல்லை. என்றாலும் தரீக்கா ஞானப்பாதை முற்றிலும் உங்களை அக வழி பாதையில் வழி நடத்தும்.

நீங்கள் இறைவணக்கம், இறை திக்ரில் தனித்திருந்து இருக்கும் போது உங்கள் உடல் ஆழ்ந்த அமைதியில் அசைவற்று இருக்க வேண்டும். உடல் அசைவுகள் நின்றால் மட்டுமே உங்கள் மனம் அசைவுகள் நிற்கும். நீங்கள் மெதுவாக உங்கள் கண்களை மூட வேண்டும் அப்போதுதான் உங்கள் வெளி உலக காட்சிகள் நிற்கும். பிறகு உங்கள் மெதுவாக கண்களை மூடுவது மிக ஆழமாக போகும்போது நீங்கள் கண்கள் மூலமாக பார்த்து பதிந்த காட்சிகள் மறைந்து இல்லாமல் போகும். நினைவுகள் அனைத்தும் இல்லாமல் போகும்.

இந்நேரத்தில் உடல் உயிர் மனம் ஆன்மா ஆழ்ந்த மௌனத்தில் அமைதி நிலைப் பெறும். உங்கள் திக்ரு சப்தம் உங்களுக்குள்ளாக பயணிக்கும். அந்நேரத்தில் திக்ரும் நீங்களும் வேறல்ல என்ற இருக்கும்.

இந்த நிலை உங்களுக்கு ஏற்படம்போது உலகில் வாழ்ந்து கொண்டு உலகை விட்டு விலகி இருப்பீர்கள் இதுதான் சூஃபி ஞானிகளின் ஜுஹுது பற்றற்ற நிலை. தரீக்கா ஞான வழி காட்டும் பாதை.

وَالَّذِيْنَ جَاهَدُوْا فِيْنَا لَنَهْدِيَنَّهُمْ سُبُلَنَا ‌ وَاِنَّ اللّٰهَ لَمَعَ الْمُحْسِنِيْنَ
எவர்கள் நம்முடைய வழியில் (செல்ல) முயற்சிக் கின்றார்களோ அவர்களை நிச்சயமாக நாம் நம்முடைய (நல்) வழிகளில் செலுத்துகின்றோம். நன்மை செய்பவர்களுடன் நிச்சயமாக அல்லாஹ் இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 29:69)

*மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப் ஆலிம்
உஸ்மானி
கலீபத்துல் காதிரி வஷத்தாரி.
மேலப்பாளையம்.*

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails