பனிக்கட்டி இன்னொரு பனிகட்டியுடன் இனைத்தால் இனையாது. இரண்டு உருகிய பனிக்கட்டி தண்ணீர் இதனையும். சில மணி நேரத்தில் உருகிய இரண்டு பனிக்கட்டி தண்ணீர் ஆவியாக போகும்.
உடல் இன்னொரு உடலைத் தேடும். ஆண் பெண் உடலைத் தேடும், பெண் ஆண் உடலைத் தேடும். ஆனால் சில நிமிடங்கள்தான். இரண்டு பனிக்கட்டி போல.
மனம் இன்னொரு மனத்தைத் தேடும். ஆனால் நிலையாக இருக்காது, நிலை மாறக்கூடியது. ஒருவருக்கு ஒருவர் அன்பு வைப்பது போல. உருகிய பனிக்கட்டி தண்ணீர் போல.
ஆன்மா இன்னொரு ஆன்மாவைத் தேடும். எல்லையற்றது. உருகிய பனிக்கட்டி தண்ணீர் ஆவியாக மாறி எல்லையற்றது (ஆன்மா) எல்லையற்றதுடன் (ஆன்மா) உடன் கலப்பது போல. உடல், உயிர், மனம், ஆன்மா எப்போதுமே அது அதுவுடன் கலப்பதையை எதிர் நோக்கி இருக்கும், விரும்பும். இதை அனைத்தையுமே அறிய முடியாது உணரவே முடியும்.
الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ
அவர்கள், (எத்தகையோர் எனில்) தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரிடும்பொழுது “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள். மேலும் நிச்சயமாக அவனிடமே நாம் திரும்பிச் செல்வோராய் இருக்கின்றோம்” என்று சொல்வார்கள்.
(அல்குர்ஆன் : 2:156)
*மௌலவி
அஹமது மீரான் சாஹிப் ஆலிம்
உஸ்மானி
கலீபத்துல் காதிரி வஷத்தாரி.
மேலப்பாளையம்.*
No comments:
Post a Comment