Saturday, November 18, 2017

அல்லாஹ் அல்லாஹ்

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை அல்லாஹ்
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே அல்லாஹ்
நல்வாழ்வினில் பேரருள்
நீயே அல்லாஹ்
நிறைவான அன்பாளனும்
நீயே அல்லாஹ்
திருவேதம் நபிநாதர்
தந்தாய் அல்லாஹ்
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே அல்லாஹ்



*
இறைவா இறைவா

கதிர் வீசிடும் காலை
உன் ஆணை இறைவா
இருள் மேவிடும் மாலையும்
உன்னாலே இறைவா
நல்வாழ்வினில் பேரருள்
நீயே இறைவா
நிறைவான அன்பாளனும்
நீயே இறைவா
திருவேதம் இறைதூதர்
தந்தாய் இறைவா
புவியாவுக்கும் நீதிக்கும்
நீயே இறைவா

இரண்டும் ஒன்றுதான். இதில் யாதொரு மாற்றமும் இல்லை. சொல்லில் என்ன இருக்கிறது பொருளில்தானே எல்லாம் இருக்கிறது. ஆகையால் இறைவன் என்று பொதுமைப் பெயரைப் பயன்படுத்துவது சிறப்பு ஏனெனில் அது தமிழ்ச் சொல்.

அல்லாஹ் (அரபி) = இறைவன் (தமிழ்)

அன்புடன் புகாரி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails