திருச்செந்தூர் செல்வதற்காக தூத்துக்குடி வழியாக சென்றோம். எட்டயபுரத்தில் பாரதியார் மணிமண்டபமும், பாரதியார் பிறந்த வீட்டையும் பார்த்தோம். அதை அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
எட்டயபுரத்தில் ‘உமறுப்புலவர் மணிமண்டபம்” அருமையாக அரசினரால் கட்டப்பட்டு பராமரிக்கப் பட்டு வருகிறது. பாரதியார் வீடு இருக்கும் தெருவின் அருகில் அமைந்திருக்கிறது. வழி காட்டும் பலகை சாலையில் இருக்கிறது.அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை தொகுத்திருக்கிறேன்.
உமறுப்புலவரைப் பற்றி
(கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து):
உமறுப் புலவர் (17ம் நூற்றாண்டு) முகம்மது நபி அவர்களின் வரலாற்றை அடியொற்றித் தமிழ் இலக்கிய மரபிற்கேற்பச் சீறாப் புராணம் என்ற காப்பியத்தைப் பாடியவர்.
வாழ்க்கைக் குறிப்பு
உமறுப்புலவர் தூத்துக்குடி மாவட்டம் நாகலாபுரத்தைச் சேர்ந்தவர். இவரின் தந்தை சேகு முதலியார் என அழைக்கப்பெற்ற செய்கு முகம்மது அலியார் ஆவார். எட்டயபுர மன்னன் வெங்கடேஸ்வர எட்டப்ப பூபதியின் அவைப் புலவராக விளங்கிய கடிகைமுத்துப் புலவரிடம் உமறு தமிழ் பயின்று புலமை பெற்றார். தம் ஆசானுக்குப் பின் எட்டயபுர மன்னனின் அவைப்புலவராகப் பொறுப்பேற்றார்
நன்றி
Sourcehttp://rathnavel-natarajan.blogspot.in/
No comments:
Post a Comment