Tuesday, June 27, 2017

பெருநாள் குத்பா செய்தி - இறை அச்சம் !

மனிதர்கள் அறிவியலில் படிப்படியாக முன்னேறினாலும் நல்லொழுக்க விஷயங்களில் முன்னைவிட இன்னும் இன்னும் மோசமாகவே இருக்கிறான்.. கருணை கொலை, சாதீய கொலை , பணத்திற்காக கொலை , நூதன கொள்ளைகள் ,திருட்டுகள்,பாலியல் அராஜகங்கள், பணம் பதவிக்காக, மதவெறிக்காக அரசியல் சதிகள் , ஓரின திருமணங்கள் , வக்கிரமான உடை நாகரீகங்கள் என ஒழுக்க செயல்கள் படு மோசமாகவே உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது ... இதனை வெறும் சட்டங்கள் போட்டு சரி செய்ய முடியவில்லை ... இங்குதான் இஸ்லாமிய மார்க்கம் மனிதர்களுக்கு வழி காட்டுகிறது ..

அதாவது இறை அச்சம் மனிதர்களிடத்தில் அதிகரித்தால் மட்டுமே குற்றங்கள் குறையும் நல்லோழுக்கங்கள் பெருகும் ... நமது ஒவ்வொரு செயல்களையும் நம்மை படைத்த இறைவன் கண்காணிக்கிறான் , நம்மை இம்மையிலும்த மறுமையிலும் தண்டித்து விடுவான் என்கிற எண்ணம் ஏற்பட்டு விட்டால் அவனின் செயல்கள் சீர் பெறும் ...
இப்படி இறை அச்சத்தை வளர்த்தெடுப்பதற்கான மிக சிறந்த பயிற்சியே புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் அதனை தொடர்ந்த நற் செயல்களும்
இறை அச்சத்திற்கான பயிற்ச்சிக்காகத்தான் மனிதர்களுக்கு நோன்பை இறைவன் கடமையாக்கினான் ... இப்படிப்பட்ட நோன்பை பிடித்து இறை அச்சம் உள்ளவர்களாக வாழ்ந்தால் மட்டுமே அந்த சமூகம் நல்லொழுக்கமுள்ள சமூகமாக மாறும் ...
இன்றைய பெருநாள் குத்பாவில் வேர்கிளம்பி பள்ளியில் இமாம் யாசீன் இம்தாதி அவர்கள் கூற கேட்டது
நல்லொழுக்கமுள்ள நல்லதொரு சமூகமாக நாம் அனைவரும் மாறுவதற்கு எல்லாம் வல்ல ரஹ்மான அல்லாஹ் அருள் புரியட்டும் என இந்த புனித நாளில் துஆ செய்கிறேன்
"تقبل الله منا ومنكم صالح الاعمال"
"🌙عيد مبــــــــــــــــــــارك🌙"
الله اكبر الله اكبر الله اكبر
لا إله إلا الله ألله أكبر
ألله أكبر ولله الحمد * ☺😍
- தக்கலை கவுஸ் முஹம்மத்

தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails