பள்ளிக்கு செல்லும் பாலகரில் தொடங்கி மகளிரும் பணிஓய்வு
பெற்றவர் வரையும் சொல்கிறார்கள் 'நான் டென்சன்ல இருக்கேன்' .
நமது பாட்டா பாட்டியோ தாய் தந்தையோ கூட இப்படி சொல்லிக் கேட்டதில்லை.
ஏன் இப்படி இப்போது?
விண்ணைத் தொடும் தேவைகளும், நமக்கு மேல் உள்ளோரை மட்டுமே காண்பதாலும் ஏற்படும் வீறாப்பினால் தானும் அந்நிலையை அடைய எடுக்கும் அபரீத முடிவுகள் முற்றுப் பெறாத தொங்கு நிலையே பெரும்பாலான டென்சனுக்கு காரணமாக இருக்கிறது.
போட்டியும் பொறாமையயும் நிறைந்து
அந்நியோன்னியமும் விட்டுக்கொடுத்தலும் மறைந்துபோன சமுதாயத்தில் 'டென்ஷன்' இருப்பதை தவிர்ப்பது கடினம்தான்.
இறை நம்பிக்கையுடன் கூடிய தன்னம்பிக்கை கொண்டு வாழ்வை எதிர்கொள்வோம்.
நிம்மதியுடன் வாழ்வோம்.
No comments:
Post a Comment