Mohamed Ashik
:படங்களும் செய்தியும் Rehannisha Ammaponnu
டாக்டர் சந்திரசேகரன் அவர்களின் எலும்பு முறிவு மருத்துவமனை. இடம் : கும்பகோணம்.
இங்கே, மருத்துவரை காணச்சென்றால்... பெயர் பதிந்த உடனேயே, "நீங்க நோன்பா?" என்று செவிலியர்களால் வினவப்பட்டு "ஆம்"எனில் டோக்கன் வரிசை காத்திருப்பு ஏதும் இல்லாமல் உடனடியாக (நெக்ஸ்ட் பேஷண்ட்டாக) மருத்துவரை சந்திக்க முஸ்லிம்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
நீண்ட நேரம் முன்னரே வந்து பெயர் பதிந்து டோக்கன் வரிசை எண் பெற்று காத்திருக்கும் பிற சமய சகோதரர்களின் கேள்விப்பார்வைக்கு விடையாக, கட்டி தொங்கவிட்டிருக்கும் இந்த அறிவிப்பை காட்டுகிறார்கள்.
நோன்பு வைத்துள்ளவர்கள் மீதான இவர்களின் இந்த #மதநல்லிணக்கம் & போற்றுதலுக்குரிய இந்த அன்பும் நேசமும் பாசமும் நம் உள்ளங்களை நெகிழ்ச்சியடையச்செய்து உருக வைத்தாலும், இறைவனிடம் நற்கூலிகளை எதிர்நோக்கி மறுமை நன்மைக்காக வைக்கப்பட்ட நம் நோன்பை, இதுபோன்று சுயலாப சாதகமாக பயன்படுத்தி, நமக்கு முந்தி வந்த நோயாளிகளை மேலும் காக்கவைத்து வரிசையை மீறுவது ஒரு முஸ்லிமாக எனக்கு என்னமோ சரியாகப்படவில்லை. நம்மை விடவும் பலர் கஷ்டப்பட்டுக்கொண்டு காத்திருக்கலாம். அவரவர் முறை அவரவர்களுக்கே விட்டுத்தரப்பட வேண்டும்.
"தங்கள் உயர்ந்த மனதுக்கு மிக்க நன்றி சகோதரி. பரவாயில்லை, நான் எனது முறைக்காக காத்திருக்கிறேன்" என்று சொல்லி வரிசை எண் டோக்கன் பெற்றுக்கொள்வதே முஸ்லிம்களுக்கு சிறப்பு.
No comments:
Post a Comment