Abdul Gafoor
இனியவர்களேஅஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)...
தணியாத வெயிலின் பணியாத தாக்குதலோடு நிறைவேறிய இருபத்தைந்தாம் நோன்பு திறக்கும் நிகழ்வு இறையருளால் நேற்று (20.06.2017) அல் மஸ்ஜிதுல் அஸ்ரப் பள்ளிவாசலில் குதூகலமாய் நிகழ்ந்தேறியது ...
நோன்பு திறந்ததும் இஞ்சி கலந்த மசாலா தானியங்களோடு காய்ச்சிய கஞ்சி நிரப்பிய கொட்ராவை கரங்களால் தூக்கி உதடுகளால் சர்ரென்று உறுஞ்சி அருந்துகையில் உற்சாகம் மிஞ்சி மணமும் சுவையும் நம்மோடு கொஞ்சி நமது வயிற்றுப் பகுதியின் சுவாச பாதைகளை ஆசுவாசப்படுத்துகிறது என்பது மறுக்க இயலாத உண்மை ....
உறக்கம் தவிர்த்து மனசில் இபாதத்துகளை இறக்கம் செய்கிற இறைவனுக்கு நன்றி செலுத்தவும் இறுதிப் பத்தில் அதிக நன்மைகளை சுமக்கவும் அதிகாலை 2 மணிக்கு தராவீஹ் தொழுகை நிகழும் புதுத்தெரு பள்ளிவாசலுக்கு ஆண்களும் பெண்களும் சிறார்களுமாக இணைந்த வருகை எழுநூறை தொடுவது மகிழ்ச்சியளிக்கிறது ...
தொழுகைக்கு பின்னர் இமாம் செய்யதலி பைசி அவர்களின் பயன் தரும் பயான் முடிந்து சஹர் நேர உணவுகளும் தொழுதோருக்கு வழங்கப்படுகிறது ....
நடப்பு பத்து நாட்களிலும் பிறருக்கு உதவும் மனமுள்ள சகோதரர்கள் குழுக்களாக இயங்கி தினமும் தோராயமாக செலவாகும் 60,000 ரூபாயினை தாங்களே உணர்வோடு ஏற்று உணவுகள் சமைத்து அனைருக்கும் பரிமாறி இறைவன் வழங்குகிற நன்மைகளை அள்ளிக் குவிக்கிறார்கள் .....
முப்பது நோன்புக்குரிய கஞ்சிக்கும் முப்பது இரவுக்குரிய தேநீர் உபசரிப்புக்கும் கடைசி பத்திற்குரிய சஹர் உணவளிப்புக்கும் உரித்தான அனைத்து சகோதரர்களுக்கு வளங்களையும் ஆரோக்கியத்தையும் நீடித்த ஆயுளையும் அல்லாஹ் நல்குவானாக ....
சிரமம் பாராது இந்த நிகழ்வுகளுக்குரிய ஏற்பாடுகளை கச்சிதமாக நிறைவேற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களையும் மனமார பாராட்டுகிறேன் ....
அன்புடனும்
நோன்புடனும்
அப்துல் கபூர்
No comments:
Post a Comment