ஏதேச்சையாய் பேசும் பொழுது ரமதானுக்கு ஊருக்கு எப்ப போறீங்கன்னு கேட்டேன்... ஒரே நேரத்தில் இருவரிடமும் கேட்க வில்லை.. வேறு வேறு நாட்களில் கேட்டேன்...
இந்த வருஷம் போகல பாய் என்றார்கள்.. ஏன் என்னாச்சு என்றேன்... ஊருக்கு போனா 5000,6000 ரூபாய் செலவு ஆகும், அதை அனுப்பி வச்சா வீட்ல பெருநாளுக்கு பயன்படும் அதான் போகவில்லை என்றார்கள்... நான் அப்டியே ஸ்டன் ஆகிட்டேன்...
அதன்பின் நான் யாரிடமும் ஊருக்கு போறீங்களான்னு கேட்கவே இல்லை.. இந்த கனமே போதும்.. இனி தாங்க முடியாதுன்னு கேட்கிறதை விட்டுட்டேன்...
உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இதே போன்ற ஏராளமான சகோதரர்களைக் கொண்ட சமூகம் தான் இஸ்லாமிய சமூகம்... காலம் முழுதும் சம்பாதித்தாலும் ஒரு நல்ல நாட்கள், விஷேங்களுக்கு அவர்களால் போக முடியவில்லை... தங்களை வருத்திக் கொண்டு, தங்கள் ஆசைகளை அடக்கிக் கொண்டு தங்கள் குடும்பத்தினர் சந்தோஷத்திற்காக தங்கள் வாழ்வை அர்பணிக்கிறார்கள்...
தாயின் தியாகங்களில் மெல்லிய சுயநலம் ஓடுவதை ஆழ்ந்து நோக்கினால் அவதானிக்கலாம்.. எந்த சுயநலமும் இல்லாத தியாகிகள் தந்தைகளே என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை...
அனைவருக்கும் பொருளாதார அபிவிருத்தியை கொடுத்து நல்ல நாட்கள், பெருநாட்களை குடும்பத்தினருடன் கழிக்கும் வாய்ப்பை இறைவன் நம் அனைவருக்கும் கொடுப்பானாக.. ஆமீன்...
No comments:
Post a Comment