Tuesday, June 20, 2017

ரமளானின் சிறப்புகளைப் பற்றிய மினி தொடரில் இதுவரை ...


ரமளானின் சிறப்புகளைப் பற்றிய மினி தொடரில் இதுவரை ...
நோன்பு முதல் பிறை பார்த்தல்
தராஹ்வீஹ் தொழுகை
ஹிஸ்பு ஓதுவது
ஸகர் உண்ணுவது
நோன்பு பிடிப்பது
நோன்பு திறப்பு இப்தார்
இஹ்திகாப்
ஆகியவற்றை எழுதி இருந்தேன் .
இன்று ...
இடம்பெறுவது
தவ்பா !
விடிந்தது முதல்
பொழுது அடைவது வரை
மனிதர்களைச் சூழ்ந்து நிற்பது
பாவங்களே !

பார்வைகள் முதற்கொண்டு
பேச்சு செயல் எல்லாமே
கவர்சிகளை கச்சை கட்டிக்கொண்டு வந்து
அனுபவி .. அனுபவி என்று ஆசைக் காட்டுகின்றன.
தெரிந்தும் தெரியாமலும்
அறிந்து அறியாமலும்
நாம் செய்து விட்ட பாவங்களின் சுமை
ஒரு மலையளவு கூட இருக்கலாம்.
அதை நம்மால் பார்க்க முடிவதில்லை.
இந்த பாவ மலையை உடைத்து அதை சல்லிகளாக்கி
அதன் மீது தார்போட்டு
சொர்க்கத்துக்கு செல்லும் சாலைகளாக்குவதே
தவ்பா !
அந்த வேலையை கொஞ்சம் ஓவர்டைம் எடுத்து செய்து முடிக்க இந்த ரமலான் மாதம் நமக்கு ஒரு அருமையான
வாய்ப்பாக அமைந்திருக்கிறது.
இந்த மாதத்தின் ஒரு நன்மைக்கு
பத்து நூறு ஆயிரம் பத்தாயிரம்
என்றெல்லாம் நன்மைகளின் எண்ணிக்கையை
தான் விரும்பியவர்களுக்கு
வாரி வழங்கும் வள்ளலாக
இறைவன் இருக்கிறான்.
இந்த பரிசு மழையில் நனைந்து
சொர்க்கத்திற்கான கூப்பனை
பெற்றுக் கொள்ள
தவ்பா என்ற விண்ணப்பத்தை
பூர்த்தி செய்து கொடுத்தாலே போதும்.
நுழைவுக் கட்டணமோ
ஜி.எஸ்.டி வரியோ
சேவை வரியோ எதுவும் தேவைஇல்லாத இலேசான அழகான சுலபமான வழி இது.
சஹர் முதல் இப்தார் வரை
இப்தார் முதல் சஹர் வரை
பாவமன்னிப்பு வானத்தின்
கதவுகள் திறந்தே இருக்கின்றன.
இறைவன் கொடையாளன் ...
அவன் நமக்குத் தந்த செல்வத்திலிருந்து
நாம் ஜக்காத்தும்
தான தர்மங்களும் கொடுக்க
எவ்வளவு ஆசைப்படுகிறோம் ...
கொடுத்த பிறகு எவ்வளவு சந்தோஷப்படுகிறோம் ....!
கடலின் ஒரு துளியளவு கூடப் பொறாத
அந்த கொடைகளுக்கே நாம் இவ்வளவு சந்தோசம் கொள்ளும் போது
கடல் காடு மலை வானம் அளவுக்கும் அதிகமாக நன்மைகளை வாரித் தருகின்ற
இறைவன் எவ்வளவு சந்தோஷப்படுவான் ?
அந்த சந்தோஷம்தான் ...
"ரய்யான்" என்ற சொர்கமாக
நமக்குக் கிடைக்கிறது.
நோன்பாளிகளுக்காகவே இறைவன் தருகின்ற பெருநாள் பரிசு
" ரய்யான் " எனும் சொர்க்கம்.!
அதனால் இரக்கமுள்ள இறைவனிடம்
கேட்போம் மன்னிப்பு !
அவன் தருவான்
பாவ மன்னிப்பு !
#ரஸூலுல்லாஹ்வும்ரமளானும் ...
" அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பை வேண்டி பெற்றவர்கள் அன்று பிறந்த பாலகர்களைப் போலாவார்கள் "
என்பது நபிமொழி .
இந்த ரமலான் மாதத்தின்
#முதல்பத்துகளில்
இறைவனிடம் கேட்கும் துஆ இது ...
அல்லாஹும்ம பி ரஹ்மத்திக
யா அர்ஹமர் ராஹிமீன்
#இரண்டாம்பத்துகளில் ஓதும் துஆ
அல்லாஹும்மஹ்பிர்லனா துனூபனா வ கதாயானா குல்லஹா யா ரப்பல் ஆலமீன்
#மூன்றாம்பத்தில் ஓதும் துஆ ...
அல்லாஹும்மஹ்தினா மினன்னாரி வ அத்கில்னல்
ஜன்னத யா ரப்பல் ஆலமீன்
#பிறைபதினைந்துக்குப்பிறகு ...
அல்லாஹும்ம இன்னக அபுவ்வன் துஹிப்புல் அப்வ பாஹ்பு அன்னா
யா கரீம் யா ரஹீம் யா அல்லாஹ்
பள்லன் மினல்லாஹி வ நிஹ்மா வ மக்பிரத்தன் வ ரஹ்மா
வ ஆபியத்தன் வ சலாமா வ நஸ்தஹ்பிருல்லாஹா வ நஸ்அலுக்களல் ஜன்னத
வ நவூதுபிக மினன்னார் ...!
அருள்மிகு ரமளானின்
அற்புத நன்மைகளை
அளவில்லாமல் கொள்ளை கொள்ள
தவ்பா செய்வோம்.
நலம் பெறுவோம் !


Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails