நோன்பை நோற்று பெருநாளையும் கொண்டாடிவிட்டோம்!
இதோடு நின்று போய்விடுமா நாம் கொண்ட ஈகை..?
இல்லை...! இனி அடுத்த வருடம் வரை நாம் உயிர் பெற்றிருந்து இப்பெருநாள் வரும்போது மட்டுமே மீண்டும் துளிர் விடுமா..?
அப்படி இன்றோடு அடங்கி அடுத்த முறை மட்டும் உயிர்த்தெழுவது மட்டுமே ஈகையல்ல!
இந்த உலகில் மனிதனும் அவன்தன் மனிதமும் உள்ள நாளெல்லாம் நின்று நெடுந்தூரம் பயணிப்பதுவே ஈகை!
பணமும் பொருளும் மட்டும் என்பதே ஈகையின் வரையறையோ அடையாளமோ அல்ல!
பாசமும், பரிவும், பண்பும், பிரியமும், நேசமும், நீங்கா மனித நேயமும், சமத்துவமும், சகோதரத்துவமும், சக வாழ்வும், அழகான சொற்கொண்ட அன்பின் வாசகமும், உள்ளன்பும், உயர்நோக்கும், கள்ளமில்லா நல் உறவுமுறையும், கற்றலும், கற்பித்தலும், கல்வி கண் கொண்ட பார்வையும், சீர்பெற்ற செம்மை வாழ்க்கையும் இவையனைத்தும் ஒருங்கே பெற்ற நல் சமுதாயம் வாழும் வரை என்றுமே ஈகைதான் இங்கே!
ஈகைத்திருநாள் நமக்கான ஒரு பெருநாள்...! கொண்டாடியதோடு நின்றுவிடா சமுதாயமாக என்றும் கடைபிடிப்போம் ஈகையை!
No comments:
Post a Comment