ரமளான் பிரிந்தது ....
கடின இலக்குகளின்
சவாலை வென்ற
அகில முஸ்லீம்களுக்கு
ஷவ்வாலை பரிசளித்து
ரமளான் பிரிந்தது ....
ஆசைகள் மிதக்கும்
மனசெனும் நதிகளில்
நீந்துகிற சலனங்கள்
சிந்தனையோடு கலந்து
பாவங்களை தூண்டுகிற
விடயங்களை தடுத்து
ஷைத்தான் வரைந்த
தடயங்களை அழித்தது ...
மகிமையூட்டிய நோன்பில்
இறையச்சத்தின் ஊட்டம்
இபாதத்தை பெருக்கிட
தொழுகையினில் நாட்டம்
ஷப்புகளை நெருக்கிட
பள்ளிகளில் கூட்டம்
இவைகளுக்கு காரணியான
ரமளான் பிரிந்தது ...
முப்பது தினங்களும்
மனித மனங்களில்
தானங்களை கருவாக்கி
நல்லமல்களை எருவாக்கி
வள்ளல்களை உருவாக்கி
நம்மோடு ஐக்கியமானது ....
வழிகளை கெடுக்கும்
சைத்தானை வெறுத்து
விழிகளை ஈரமாக்கும்
துவாக்களை உச்சரித்து
உள்ளங்கள் சுத்தமாகும்
குர்ஆனை ஓதுகிற
உன்னதங்களை நமக்களித்தது ....
மனிதங்கள் தழைத்து
பிரார்த்தித்த நாவுகளுக்கு
நன்மைகளை வழங்கி
உள்ளமெனும் நிலத்தில்
புனிதங்கள் விதைத்து
ரமளான் பிரிந்தது ....
ஏகனே இறைவனே
விரிந்த புன்னகையோடு
புறப்பட்ட ரமளான்
சிந்திய இபாதத்துகளால்
பெறப்பட்ட பாக்கியங்கள்
நிலைத்திட அருள்வாயாக
....
அப்துல் கபூர்
No comments:
Post a Comment