உங்கள் வயது என்ன? நீங்கள் உங்கள் வயதை.... சொல்வீர்கள். நீங்கள் சொன்னது உங்கள் வயது கிடையாது. நீங்கள் ஒன்றும் அற்ற நிலையே நோக்கி பயணிக்கிறீர்கள் அந்த பயணத்தில் கடந்து வந்த காலத்தைச் சொல்கிறீர்கள். கடந்து வந்த காலம் வயது 15,25,50,70 இருக்கலாம் தெரியும் ஆனால் நீங்கள் இன்னும் போகும் தூரம் தெரியாது.
இறைவனை தேடி அல்ல.ஞானத் தேடுதலில் உங்களுக்குள் ஆன்மாவை நோக்கி பயணமாவீர்கள் அப்போது உங்கள் பயணம் தொடருமே தவிர முடிவு இருக்காது. ஆன்மீகத்தை ஆன்மாவில் தேடல் ஒரு கரை மட்டுமே தவிர மறு கரை இல்லை.
நான் ஞானம் அடைந்து விட்டேன் என்று யாரும் சொல்ல முடியாது அப்படி சொன்னால் அவர் மேலும் பயணிப்பதை நிறுத்தி விட்டார் என்றே அருத்தம். தனது ஆன்மாவில் உள் தேடுதலில் இருந்து வெளி வராதவர் எப்படி நான் ஞானம் அடைந்து விட்டேன் என்று கூற முடியும்.
பறவை ஒன்று கடல் கரையில் இருந்து கரையற்ற கடல் மேல் பறந்தது மறு கரையைத் தேடி. அந்த பறவை கொஞ்சம் ஓய்வு பெற நினைத்தது காகம் நிற்பதற்கு எதுவுமே இல்லை அதனால் திரும்பி வரவும் முடியவில்லை அப்போதுதான் அந்த பறவை உணர்ந்தது வந்த தூரம் மட்டுமே தெரியும் இன்னும் போகும் தூரம் தெரியாது என்று.
நீங்கள் தனிமையில் ஆழ்ந்த மௌனத்தில் ஆன்மீக தேடலில் ஆத்மார்த்தமாக உங்களுக்குள் உள்ளிறங்கும்போது உங்கள் ஆன்மா கதவுகள் திறக்கும் ஆனால் அதிகமான ரகசியங்கள் விளக்கப்படுவதில்லை. அதனால் உங்கள் ஆன்மாவில் ஆன்மீக பயணம் இன்னும் ஆழமாக செல்லும், திரும்பாது
ஆன்மா பயணம் செல்பவர்கள் மட்டுமே, அடைந்தவர்கள் இல்லை.
قَالُوْا سُبْحٰنَكَ لَا عِلْمَ لَنَآ اِلَّا مَا عَلَّمْتَنَا اِنَّكَ اَنْتَ الْعَلِيْمُ الْحَكِيْمُ
(அவ்வாறு அறிவிக்க முடியாமல்) அவர்கள் (வானவர்கள்) (இறைவனை நோக்கி) "நீ மிகத் தூய்மையானவன். நீ எங்களுக்கு அறிவித்தவற்றைத் தவிர (வேறொன்றையும்) நாங்கள் அறிய மாட்டோம். நிச்சயமாக நீ மிக்க அறிந்தவனும், ஞானம் உடையவனாகவும் இருக்கின்றாய்" எனக் கூறினார்கள்.
(அல்குர்ஆன் : 2:32)
*மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப் ஆலிம்
உஸ்மானி
கலீபத்துல் காதிரி வஷத்தாரி.
மேலப்பாளையம்.*
No comments:
Post a Comment