Monday, July 24, 2017

கந்திரமே உந்தன் விலை என்னவோ?

இறைவனது படைப்பில் அனைவரும் சமமே! உயர்வு தாழ்வு சொல்லுதல் பாவம். இதுபோன்றவை எல்லாம் நன்மக்கட்கு மட்டும் சொன்னதோ? இல்லை, அனைவர்க்கும் சொல்லப்பட்டது. ஆனாலும் தன்னை சுற்றி இருப்பவர்கள் முட்டாள்களாக இருக்க விரும்புபவர்கள் அடிமுட்டாளாகவே இருப்பார் எனபது எனது எண்ணம்.

உகாண்டாவில் பொதுவாக அறிவாற்றல் உள்ளவர்களை 'திருட்டு புத்தி உடையவன் ' (ஒழி முப்பி ) என்று விளையாட்டாக சொல்லுவது பழக்கத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தது. சர்வாதிகார அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் அதிக படிப்பறிவில்லாத சர்வாதிகார்களின் அச்சுறுத்தலில் வாழ்ந்தவர்களுக்கு அது ஒரு மனவியல் சார்ந்த திணிப்பாக அவர்களும் அறியாமல் அதிகம் படிப்பறிவில்லாத மக்களின் மனதில் பதிந்து விடுகிறது அல்லது பதிக்கப்படுகிறது. இது மக்களின் எதிர்ப்பையும் கிளர்சிகளையும் எற்படுத்தாதாமல் இருக்கும் என்கிற ஆட்சியாளர்களின் குறுகிய எண்ணத்தின் செயற்பாடுதான்.
தனிமனித கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்களிலும் கூட இப்படி நடக்கலாம். தனிநபர் துதிபாடலும் தன்னை முட்டாள் போல் காட்டிக்கொள்பவர்களும், முட்டாள்களையே தன்னை சுற்றிலும் வைத்துக் கொள்வதும் நடைமுறையில் இருக்கலாம். ஏனென்றால் அப்போதுதான் தான் சொல்வது அரங்கேறும் அது முட்டாள்தனமானதாக இருந்தாலும் கூட.
சாதாரணமாகவே பொதுமக்களிடம் தொடர்ந்து பொய்யை பேசி பின்னர் அதையே வலுக்கட்டாயமாக புகட்டிவிட்டு உண்மையென நம்பவைத்து தத்தமது ' தத்துவங்களை ' செயல்படுத்துவதுதானே தற்கால அரசியல்?
சுகந்திரமே உந்தன் விலை என்னவோ?

ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails