சில முஸ்லிம் கிராமங்களில் மவுலூது என்ற பேரிலும் ராத்தீப் என்ற பேரிலும் பயான் என்ற பேரிலும் கூம்பு வடிவ ஸ்பீக்கர்களில் விடிய விடிய அதிக சப்தத்தோடு ஒலிபரப்புகிறார்கள். ஒலியின் சப்தத்தை குறைத்துக் கொள்வது நம் அனைவருக்கும் நல்லது.
உமது இறைவனைக் காலை யிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!
திருக்குர்ஆன் 7:205
ராத்திபு என்றும் ஹல்கா என்றும் பல பெயர்கள் இட்டுக் கொண்டு திக்ர் மஜ்லிஸ் நடத்துகின்றார்கள். அதில் இறைவன் கூறும் இந்த ஒழுங்கைப் பேணுவதில்லை.
அல்லாஹூ என்பதை "ஹூஹூ' "ஹூஹூ' என்றும் "அஹ்' என்றும் இறைவனின் பெயரைச் சிதைத்துக் கூறுகிறார்கள். இதுமட்டுமின்றி ஹக் தூ ஹக் என்றும் 'இல்லல்லாஹ்' 'இல்லல்லாஹ்' என்றும் இன்னும் பல்வேறு அர்த்தம் இல்லா புது வார்த்தைகளை இவர்களாக உருவாக்கி திக்ர் என்ற பெயரில் செய்கிறார்கள்.
இவர்களது இந்தச் செயல் பின்வரும் வசனத்தை நேரடியாக மறுக்கும் விதத்தில் அமைந்துள்ளது.
அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
திருக்குர்ஆன் 7:180
No comments:
Post a Comment