Thursday, May 4, 2017

யாருக்கு யார்மேல் பயம் ?

ஒரே குழுவாக செயல்பட்டு ஒன்றுக்குள் ஒன்றாக இருந்துகொண்டு அராஜகங்கள் அநியாயங்கள் அனைத்திலும் பங்குபெற்றுவிட்டு பலனையும் பெற்று அனுபவித்து ருசிகண்ட பூனையாய் அத்தனையும் தனக்கேவேண்டுமென எழும் பேராசையால் வரும் பிரிவுகள் காலம் காலமாக மனிதர்களிடையே அழிவுகளை ஏற்படுத்தியிருப்பது சரித்திரங்கள் சொல்லும் உண்மை. அதை நாம் வாழும் காலத்தில் பன்னாட்டு அரசியலில் பார்வையாளனாக பார்த்ததுபோல் இப்போது அதே அரசியலில் பாதிக்கப்பட்டவனாக தமிழன் இன்று இருக்கிறான்.

மனிதனை மனிதன் தலைவனாக தேர்ந்தெடுக்க அவன் சர்வாதிகாரியாக உருமாறினால் அதே மனிதன் வருங்காலத்தில் கிளர்ச்சி செய்யலாம் ஆனால் அதனால் வரும் கேடுகளில் இருந்து இறைவன் தான் மக்களைக் காப்பாற்ற முடியும்.
தனிமனித ஒழுக்கமே சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு முதல்படி. ஒழுக்கம் கெட்டுவிட்ட தலைமை அழிவின் உச்சத்திற்கு மிகவிரைந்து கொண்டுசேர்க்கும். அதனால் வரும் கஷ்டமும் நஷ்டமும் மக்களுக்குத்தான். கஷ்டங்களை கடந்துசெல்லும் மக்கள் சுதாகரித்துக் கொள்ளவில்லையெனில் அதிகார வர்க்கத்தின் அழிவு எந்திரம் முடுக்கிவிடப்படும். சாதாரண மக்களின் வாழ்நலமும் மனநலமும் முழுமையாக பாதிக்கப்படும். நிச்சயமாக அது வருங்கால சந்ததியினரை அவர்களது வளர்ச்சியையும் முன்னேற்றத்தையும் கேள்விக்குறியாக்கும்.
சாதாரண மக்கள் அமைதியையே விரும்புகிறார்கள். ஆனாலும் 'அமைதியை விரும்பு அதேநேரம் போராடவும் ஆயத்தமாய் இரு' என்றல்லவா மூத்தோர் சொல்லிச் சென்றிருக்கின்றனர்.
பொறுத்திருப்போம். பொறுமையாளர்களோடு இறைவன் இருக்கிறான்.
எண்ண ஓட்டம் ....!
தொடரலாம்.
ராஜா வாவுபிள்ளை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails