Sunday, April 30, 2017

அவங்க சொல்றதும் சரிதான்.இவங்க சொல்றதும் சரிதான்..எது தான் உண்மை..

Saif Saif

பாமரன் நம்மை ரெம்ப தான் கன்புயூஸ் பண்றாங்க இவங்க...
தாயின் காலடியில் சொர்க்கம்..நபிகள் சொன்னது..
இதற்கு தாயின் காலடியில் ஒரு சொர்க்கம் இருப்பதாக அர்த்தமாகுமா.!?.அதற்காக நாம் தாயின் கால்களை முத்தம் கொடுப்பது தவறாகுமா..!?
அப்படிச் செய்யலாமா..?
இது ஷிர்க் அல்லவா.?
ஆனால் இப்படி நம் மக்கள் யாரும் செய்ததாக தெரியவில்லையே இப்படி எல்லாம் சிந்திக்க வேண்டுமா..?
இதற்கு அர்த்தம் தாயை மதிக்க வேண்டும்,பேண வேண்டும் அவர்களுக்கு உரிய பணிவிடைகளை செவ்வனே நிறைவேற்ற வேண்டும் இவ்வாறு செய்பவர்கள் மரணத்திற்கு பிறகு சொர்க்கம் செல்வார்கள் என்ற அர்த்தத்தில் தானே நாம் அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும்...
அடுத்து,

வகுப்பில் வாத்தியார் நுழைந்ததும் சார் வணக்கம் என்று சொல்கிறோம்..அவரும் பதிலுக்கும் அதையே திருப்பி சொல்கிறார்..
இது நாம் அவரை வணங்குவதாக அர்த்தம் ஆகுமா..!? அவரும் நம்மை வணங்குவதாக எடுத்துக் கொள்ளலாமா..!?இல்லை மரியாதை கொடுப்பதாக அர்த்தம் ஆகுமா..!?
அமெரிக்காவிலோ,ஆப்பிரிக்காவிலோ வசிப்பவர்கள் ஹலோ குட்மார்னிங் ஸார் என்று சொல்வது ஷிர்க் ஆகுமா..!?
அப்படி ஷிர்க் என்றால் இங்கு வசிக்கும் நம்மவர்கள் மாற்றுமத உயர் அதிகாரிகளுக்கு ஸலாம் சொல்கிறார்களா ..!?
இல்லை குட்மார்னிங் சொல்கிறார்களா..!?
இப்படிச் சொல்வதால் இவர்கள் இணை வைப்புக்கு ஆளாகி விட்டார்களா..!?
இறைவன் தன் திருமறையில்,
நம்பிக்கை கொண்டவர்களே ! அல்லாஹ்வுக்குக் கீழ்ப் படியுங்கள்..அவனுடைய தூதருக்கும் கீழ்ப் படியுங்கள்.மேலும் ,உங்களில் அதிகாரம் உடையவருக்கும் (கீழ்ப் படியுங்கள்) (4 :59)
என்று கூறுகிறான்..
இவ் வசனத்தில் உங்களில் அதிகாரம் உடையவருக்கு கீழ் படியுங்கள் எனச் சொல்கிறானே அதற்கு என்ன அர்த்தம்..
உங்கள் தலைவருக்கு மதிப்பு கொடுங்கள்..அவர் சொல்வதை கேளுங்கள் என்பதாக பொருள் கொள்ள வேண்டுமா..!? அல்லது அவருக்கு சுஜூது செய்யுங்கள் என்ற அர்த்தம் வருமா..!?
இப்படி பல கேள்விகள்
மனதில் உதிப்பது இயற்கை தானே ..அது ஒரு புறம் இருக்கட்டும்..
ஒருமுறை அபூஜஹ்ல் அம்மார்(ரலி) அவர்களை பாலைவன சுடுமணலில் கிடத்தியும்,தண்ணீரில் மூழ்கடித்தும் முஹம்மதை திட்ட வேண்டும்..அவர்களின் தெய்வங்களை புகழ வேண்டும் என கொடுமை படுத்திய போது அந்த வேதனை தாங்காமல் அவர் நிராகரிப்பவர்களின் கட்டளைக்கு இணங்கி விட்டார்..
நாம் என்ன நினைப்போம். அம்மார் தவறு செய்து விட்டாரே இறைவனுக்கு மாறு செய்து விட்டாரே என்று தானே கூறுவோம்..ஆனால் இறைவனின் பார்வையில் அது வேறு விதமாக இருந்தது..
அந்நேரம் இறங்கிய கீழ் கண்ட இறைவசனம் அதை உறுதியாக்குகிறது..
எவரேனும் இறைநம்பிக்கை கொண்ட பிறகு கட்டாயத்திற்குள்ளாகி -அவருடைய உள்ளம் இறைவனை ஏற்றுக் கொள்வதில் நிம்மதியுடன் இருக்கும் நிலையில் நிராகரித்தாரானால் அவர் மீது குற்றமில்லை.!ஆனால் எவர் மனநிறைவுடன் நிராகரிப்பை ஏற்றுக் கொள்கின்றாரோ,அவர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்.இத்தனையவர்
களுக்கு மாபெரும் வேதனையும் இருக்கிறது..(16:106)
இவ் இறைவசனத்தின் வாயிலாக அம்மார்(ரலி) அவர்கள் மீது பாதகமில்லை என இறைவன் கூறி உள்ளது தெளிவாகிறது..
ஏற்றுக் கொண்ட மார்க்கத்தை பழித்தப் பிறகும் இறைவன் அவரை பொருந்திக் கொண்டான்..
இதிலிருந்து நாம் மனதில் கொள்ளும் நிய்யத் தான் முக்கியம் என்பதும் ஐயமறத் தெளிவாகிறது..
மேலும் திருமறையில்,
(உள் நோக்கம் எதுவுமின்றி) தற்செயலாக நீங்கள் செய்யும் அபத்தமான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான்..ஆனால் உளப் பூர்வமான சத்தியங்களுக்கு அல்லாஹ் உங்களை குற்றம் பிடிப்பான் (2:225)
இதில் சாதரணமான (உள் நோக்கம் இல்லாது) செய்யும் சத்தியங்களுக்காக குற்றம் பிடிக்க மாட்டேன் என்றும் வேண்டுமென்றே பொய் சத்தியம் தான் செய்யக் கூடாது..என்பதும் தெளிவு..
இப்படி பல வழிகளிலும் சலுகை வழங்கிய இறைவன் எப்படி பிறருக்கு மரியாதை நிமித்தமாக கூறப்படும் வணக்கம்,குட் மார்னிங் போன்ற வரவேற்புச் சொற்களை இணை வைப்பு சொற்களாக எடுத்துக் கொள்வான் என்பது மிகுந்த ஆச்சரியத்தையும்,வருத்தத்தையும் தருகின்றது...
இது மொழி சார்ந்த சொல்லாகவும்,மரியாதை நிமித்தமாகவும் கலந்த சொல்லாக மட்டுமே பார்க்க வேண்டிய ஒன்று..வாழ்க்கை நடைமுறையில் அத்தியாவசியமான ஒன்று...
நாம் கலிமா சொல்லியிருக்கிறோம்..
அல்லாஹ்வை தான் தொழுகிறோம்..வேறு எந்த தெய்வத்தையும் வணங்கவில்லை...மனதுக்கும் தெரிகிறது..புத்திக்கும் தெரிகிறது..இறைவனுக்கும் அது கண்டிப்பாக தெரியும்..வேறு என்ன வேண்டும்..
இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம்..
அதை இது
போன்ற ஆழ்ந்த சிந்தனைகளால் கடினமாக ஆக்கி விடாதீர்கள்..
என் சிற்றறிவுக்கு நான்
புரிந்து கொண்டதை விளக்கியிருக்கிறேன்..
நீங்களும் இப்படித் தான் விளங்கி கொள்ள வேண்டும் என சொல்லவில்லை...இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை இணை வைப்புக்கு இணையாக பேச வேண்டாம் என்று தான் சொல்கிறேன்..

Saif Saif

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails