Tuesday, February 5, 2013

பெண்கல்வி..!


இறைவன் முதலில் படைத்தது எழுதுகோல்..
கல்வியின் பெருமையைக் கூறும் அளவுகோல்..

நமை கற்கத் தூண்டும் தூண்டுகோல்..
கல்வியே ஞானத்தின் திறவுகோல்..

சாதிக்க பிறந்த பெண்ணே!
அந்த சாதனைக்கு தேவை கல்வி தானே!

மூலையில் முடங்கிடாதே பெண்ணே!
மூளையாய் செயல்பட தேவை கல்வி தானே!

அறிவெனும் ஒளியை மிளிரச் செய் பெண்ணே!
அறியாமை இருளை அகற்றிவிடு பெண்ணே!

புறஅழகை மட்டும் மெருகேற்றாதே பெண்ணே!
அகஅழகை கல்வியினால் மெருகேற்றிடு பெண்ணே!

பார்வையை தாழ்த்தி நடந்திடு பெண்ணே!
கல்வியினால் தன்னம்பிக்கையை நிமிரச்செய் பெண்ணே!



அடுப்பூதும் இல்லத்தரசியாகவும் இருந்திடு பெண்ணே!
ஆகாயத்தில் பறந்திடவும் முயற்சி செய் பெண்ணே!

ஆபாசப் பார்வையிலிருந்து உனைக் காத்துகொள் பெண்ணே!
அடக்குமுறையை எதிர்த்து போரிடவும் துணிந்து நில் பெண்ணே!

மனம் போன போக்கில் சென்றிடாதே பெண்ணே!
மறுமை வெற்றியை இழந்திடாதே பெண்ணே!

மார்க்க வரம்புகளை மீறிடாதே பெண்ணே!
மார்க்கத்தில் உறுதியாக நிலைத்திடு பெண்ணே!

இறைவன் நமக்களித்த சிறப்பு.. அறிவு..
கல்வியினாலே அதற்கு உண்டு தெளிவு..

கல்வி கற்க செல்பவர் திரும்பும் வரை..
அவர் இறைவனின் பாதையிலே..
பெண்ணே.. புறப்படு கல்வி கற்க..
நீயும் அப்பாதையிலே..

ஆக்கம்: உடன்குடி செய்யது அபூபக்கர் சித்தீக்
Source : http://muthupet.org/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails