Wednesday, January 13, 2016

வாருங்கள் கூடிப் பேசுவோமே !



விவாதங்களில்
வெற்றி தோல்வி
நோக்கம் ஆக கூடாது
எனக்கும், உங்களுக்கும்
அருள் மறையை
மறந்தது தீமை
பிறர் குறையை
மறைப்பது நன்மை
ஈமான் பலமா இல்லையா
ஏடு கிடைக்கும் மறுமையில்

எனக்கும் , உங்களுக்கும் ,
மறுப்புக்கும் ஏற்புக்கும்
கருத்துக்குமான தளம் தான்
விவாத தளம்.
கிண்டலுக்கும்
நக்கலுக்கும்
சண்டைக்குமான தளம்
விவகார தளம் ?
அழகிய விவாதமுறை
ஆரோக்கிய முறை
அழுகிய விவாதமுறை
ரோக முறை
வாருங்கள்
திறந்த மனதுடன்
திருந்தும் மனதுடன்
நன்மை நாடி
உண்மையறிய
பிறரை மதித்து
நம்மை மதிக்க
வாருங்கள் கூடிப் பேசுவோம் !...
- தக்கலை கவுஸ் முஹம்மத்

தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails