Showing posts with label பாசம். Show all posts
Showing posts with label பாசம். Show all posts

Saturday, September 28, 2013

ஆட்டுக்குட்டி ...........


நாம் மற்றவங்களுக்கு உதவி செய்யும் போது செய்த உதவியயை அந்த நேரத்தோடு நாம் மறந்து விடுவோம்

ஆனால் நம்மிடம் இருந்து உதவி பெற்றவர்கள் நாம் செய்த உதவியை எப்போதும் அவர்களின் மனதில் வச்சுக்கிட்டு தான் இருக்காங்க

நோன்பு பெருநாள் அன்று கத்தார் நாட்டில் இருந்து ஒரு சகோதரர் எனக்கு போன் செய்து என் பெயரை கூறி பெருநாள் வாழ்த்து கூறினார் அதோடு உடல் நலமும் விசாரிச்சார்

ஆனால் இவர் யார் என்று கொஞ்ச நேரமா தெரியாமதான் அவர் கிட்ட பேசிட்டு இருந்தேன். பிறகு சிறிய கூச்சத்தோட.......... மன்னிக்கணும் நீங்க யாருன்னு எனக்கு சரியா பிடி படல்ல, உங்க பெயரும் என்று இழுத்தேன் ......

அவர் நிதானமாக தன் பெயரையும், நாங்கள் இருவரும் சந்தித்த இடத்தையும் விளக்கினார். என் மனசுக்கு சந்தோசமா இருந்தது

Sunday, January 13, 2013

தாயும் சேயும் பொருள் அறியா இனிய ஓசை

வயிற்றில்  பாரத்தைக் கொடுக்க
வயிற்றை வீட்டுப் பிரிய
தொப்புள் கொடி அறுவை முடிய
மார்பகத்தில் பால் சுரக்க
மார்பகம் பாரமானது

வயற்றிலிருந்து பிரிந்த
து பாசத்தைக் கொடுத்தது
மார்பகத்திலிருந்து பிரிந்தது பசியைப் போக்கியது
பசிப்போனபின் அழுகைக் குரல் நின்றது
வயிறு நிறைந்தபின் உறக்கம் வந்தது

Monday, December 3, 2012

ஏங்கி நின்றேன்...!

பள்ளிப்பருவத்து முன்பருவத்தில்...
பகல் உணவில் கூட பால் தந்த ...
அந்த அன்னையின் பாசம்...
இன்று தூரமாகி போனதை எண்ணி...
ஏங்கி நின்றேன்...!

பள்ளிப்பருவம் எட்டியதும்...
பார்ப்போர் வியக்க பணிவிடை செய்து...
பாடசாலை அனுப்பி வைத்ததை நினைத்து...
ஏங்கி நின்றேன்...!

படித்தது போதும் என்று...
பாதிலேயே கல்வி விட்டு....
பன்னாட்டு விமான நிலையம் கண்டு...
புலம்பெயரும் கனவுகள் சுமந்து...
பாசத்தை தூரமாக்கி....
ஏங்கி நின்றேன்...!

வாப்பா பார்த்து, உம்மா பார்த்து...
வரதட்சணை கண் மறைத்து...
வாயாடிப் பெண்ணை மணந்து...
அன்புக்காக...
ஏங்கி நின்றேன்...!

Wednesday, January 18, 2012

பகைமை மறந்து பாசம் காட்டி வாழ்வோம்!

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியாரான ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறினார்;
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் ரளியல்லாஹு அன்ஹு (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, அவரா இப்படிக் கூறினார்?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர். அப்போது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்' என்று கூறிவிட்டார்கள்.

Monday, December 6, 2010

தானாடா விட்டாலும் தசையாடும் குடும்பம்

அடித்தாலும் பிடித்தாலும் அன்பானது குடும்பம்
நடித்தாலும் நகைத்தாலும் நட்பானது குடும்பம்
துடித்தாலும் துரத்தினாலும் தொடர்வது குடும்பம்
மடித்தாலும் மடங்காத மரமானது குடும்பம்

வெட்டினாலும் தட்டினாலும் விருட்சமாகும் குடும்பம்
திட்டினாலும் புகழ்ந்தாலும் தித்திக்கும் குடும்பம்
நட்டமோ இலாபமோ நன்மையாம் குடும்பம்
பட்டறிவுப் பட்டம் பெற்றுதரும் குடும்பம்

தானாடா விட்டாலும் தசையாடும் குடும்பம்
வானோடு நிலவுபோல் வாழ்வோடு குடும்பம்
தேனோடு பால்போல் தெவிட்டாத இன்பம்
மானோடு மானம்போல் மாண்பு காக்கும்

வாசமலராய் என்றும் வாழ்கை மணக்கும்
வீசும் தென்றலாய் விலகாது நிற்கும்
பேசிப் பழகினால் பாசம் புரியும்
நேசித்து வாழ்ந்தால் நெருக்கம் தெரியும்

“கவியன்பன்”கலாம், அதிராம்பட்டினம்

Source : http://kalaamkathir.blogspot.comகுடும்பம்

LinkWithin

Related Posts with Thumbnails