வயிற்றில் பாரத்தைக் கொடுக்க
வயிற்றை வீட்டுப் பிரிய
தொப்புள் கொடி அறுவை முடிய
மார்பகத்தில் பால் சுரக்க
மார்பகம் பாரமானது
வயற்றிலிருந்து பிரிந்தது பாசத்தைக் கொடுத்தது
மார்பகத்திலிருந்து பிரிந்தது பசியைப் போக்கியது
பசிப்போனபின் அழுகைக் குரல் நின்றது
வயிறு நிறைந்தபின் உறக்கம் வந்தது
