இறைவனால் அருளப்பட்ட அனைத்துமே அழகு. இயற்கையின் அழகைக் கண்டு மகிழ்வதில் மனம் அமைதி அடைவதுண்டு. கலையை ரசித்துப் பார்பதிலும் ஒவ்வொருவருக்கும் ஒரு வேறுபாடு ஏற்படுவதும் இயல்பு. ஒருவருக்கு பிடித்தது ஒருவருக்கு பிடிக்காமல் போகலாம்.ஆனால் அந்த கலை உருவாக்கப் பட்டதே ஒரு மகிமைதான். இறைவன் மனிதனுக்கும் ஒரு திறமையைக் கொடுத்து ஒரு கலையை உருவாக்கக் கூடிய ஆட்றலை
தந்துள்ளான். கலை என்பது ஒரு சிலையை வடிப்பது மட்டுமல்ல. அது அழகிய ஓவியமாகவோ,கவிதையாகவோ,கட்டிடமாகவோ மற்றும் பல வகைகளில் இருக்கலாம். அந்த அற்புத கலை படைப்புகள் பல கால ஓட்டத்தில் பல காரணங்களுக்காக சிதைந்துவிட்டதனயும் நாம் அறிகின்றோம். அது இயற்கையால் ஏற்பட்டதாக அல்லது மனிதனால் உண்டாக்கப்பட்ட போர், அரசியல், மத நோக்கங்கள் மற்ற பல காரணங்களும் இருக்கின்றன. உருவாக்குவது கடினம் அழிப்பது எளிமை.
எப்பொழுதும் ஒரு கலை ஒரு கலாச்சார பாரம்பரியங்களை விளக்கக் கூடியதாகவும் ஒரு சரித்திர காலத்தினை நமக்கு அறிவிப்பதாகவும் அமையலாம். இழந்தவைகளை மீட்பதில் பெரு முயற்சி எடுத்து வருகின்றனர்.
இந்தியாவில் தாஜ்மகால்,மொகஞ்சதார மற்றும் அஜந்தா ஓவியங்கள் சிலைகள் ,மகாபலிபுரத்தில் காணப்படும் கருங்கல் சிற்பம், மதுரை மீனாதி மீனாட்சி அம்மன் கோவில் இன்னும் பல உள்ளன. ஒவ்வொன்றும் ஒரு கலாச்சார பாரம்பரியங்களை விளக்கக் கூடியதாக அமைந்துள்ளன.
கீழ் உள்ள படங்கள் பாரிசில் எடுத்த படங்கள்
No comments:
Post a Comment