Monday, July 7, 2014

விபத்தில் சிக்கியவர்களுக்கு தனது காரைக் கொடுத்து விட்டு ஆட்டோவில் போன அமைச்சர்!

பெங்களூரு: கர்நாடகாவின் சுகாதாரத் துறை அமைச்சர் சாலை விபத்தில் மாட்டியவர்களைத் தன்னுடைய காரில் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ஆட்டோவில் சென்ற சம்பவம் அங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் யு.டி. காதர். அவர் நேற்று காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, வயதான தம்பதியர் விபத்தில் சிக்கிப் பரிதவித்ததைப் பார்த்தார். உடனே அவர்களை தன்னுடைய காரின் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி விட்டு, ஆட்டோ மூலம் தன்னுடைய பயணத்தைத் தொடர்ந்துள்ளார்.

"அமைச்சர் தன்னுடைய தொழுகைக்காகச் சென்று கொண்டிருந்தார். ரம்ஜான் நேரம் என்பதால் அவர் நோன்பிலும் இருந்தார். அப்போதுதான் மெக்ரி சர்க்கிள் அருகில், ஆட்டோ ரிக்‌ஷாவில் விபத்துக்குள்ளான தம்தியினரைப் பார்த்துள்ளார். உடனடியாக அவர்களுக்கு சிகிச்சை அளிக்கத் தன்னுடைய கார் ஓட்டுநரின் மூலமாக கே.ஜி. மருத்துவமனை மல்லேஸ்வரத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்" என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பின்பு காதர் அங்கிருந்து ஆட்டோ மூலமாக மசூதிக்குச் சென்றுள்ளார். மேலும், தன்னுடைய நோன்பையும் தாமதமாக முடித்துள்ளார்.

நன்றி : ஒன்இண்டியா

 by: Vijayalakshmi Published: Monday, July 7, 2014, 11:57 [IST]
http://www.satyamargam.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails