பாத்திமா...
கண்மணி ரசூலுல்லாஹ்வின்
கண்மணி மகள் !
பருவ வயது மகள் ...
மணமுடிக்கும் நேரம் !
மதினாவின் பெரும் பெரும் செல்வந்தர்கள்
நபிகளார் மகளை பெரும் மகர் கொடுத்து
மணமுடிக்கக் காத்திருந்தார்கள் !
ஆனாலும் அண்ணலாரிடம் சென்று
பெண் கேட்க அச்சம் !
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்..
மக்காவிலிருந்து ஏழையாக, அகதியாக மதீனாவுக்கு வந்து
வியாபாரத் திறமையினால்
செல்வந்தரான சஹாபி !
ஒருநாள் துணிந்து சென்று
பெருமானாரிடம்
பாத்திமாவை பெண் கேட்டார் !
பொறுமை நபி ( ஸல் ) அவர்கள்...
புன்னகை மாறாமல் சொன்னார்கள்...
" நபிமார்களின் பெண் பிள்ளைகள்
விற்கப்படுவதில்லை "
இறைவன் நாட்டப்படி
அண்ணலாரின் மனசுப்படி
பாத்திமா நாயகியை
அலீ பின் அபிதாலிப் அவர்கள்
மணமுடித்தார்கள் !
அல்லாஹ் ...
அண்ணலாரின் மனசுக்கு
மகிழ்வளிப்பவன் !
அவர்களின் பிரார்த்தனைகளை
நிறைவேற்றித் தருபவன் !
மகளின் திருமண முடிவை
அல்லாஹ்விடமே
அண்ணல் ஒப்படைத்திருந்தார்கள் !
அல்லாஹ் ...
அழகான வாழ்வை அமைத்துக் கொடுத்தான் !
அல்ஹம்துலில்லாஹ் !
கவிதை தந்த அண்ணன் Abu Haashima Vaver அவர்களுக்கு வாழ்த்துகள்
கண்மணி ரசூலுல்லாஹ்வின்
கண்மணி மகள் !
பருவ வயது மகள் ...
மணமுடிக்கும் நேரம் !
மதினாவின் பெரும் பெரும் செல்வந்தர்கள்
நபிகளார் மகளை பெரும் மகர் கொடுத்து
மணமுடிக்கக் காத்திருந்தார்கள் !
ஆனாலும் அண்ணலாரிடம் சென்று
பெண் கேட்க அச்சம் !
அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ப்..
மக்காவிலிருந்து ஏழையாக, அகதியாக மதீனாவுக்கு வந்து
வியாபாரத் திறமையினால்
செல்வந்தரான சஹாபி !
ஒருநாள் துணிந்து சென்று
பெருமானாரிடம்
பாத்திமாவை பெண் கேட்டார் !
பொறுமை நபி ( ஸல் ) அவர்கள்...
புன்னகை மாறாமல் சொன்னார்கள்...
" நபிமார்களின் பெண் பிள்ளைகள்
விற்கப்படுவதில்லை "
இறைவன் நாட்டப்படி
அண்ணலாரின் மனசுப்படி
பாத்திமா நாயகியை
அலீ பின் அபிதாலிப் அவர்கள்
மணமுடித்தார்கள் !
அல்லாஹ் ...
அண்ணலாரின் மனசுக்கு
மகிழ்வளிப்பவன் !
அவர்களின் பிரார்த்தனைகளை
நிறைவேற்றித் தருபவன் !
மகளின் திருமண முடிவை
அல்லாஹ்விடமே
அண்ணல் ஒப்படைத்திருந்தார்கள் !
அல்லாஹ் ...
அழகான வாழ்வை அமைத்துக் கொடுத்தான் !
அல்ஹம்துலில்லாஹ் !
கவிதை தந்த அண்ணன் Abu Haashima Vaver அவர்களுக்கு வாழ்த்துகள்
No comments:
Post a Comment