இஸ்லாம் வலியுறுத்தும் நோன்பு என்பது, மதக்கடமை என்பதையும் தாண்டி அறிவியல் பூர்வமான உண்மை என்று கருதுகிறார் எழுச்சித் தமிழர். ஆண்டுக்கு ஒரு மாதம் வயிற்றுக்கும், செரிமான உறுப்புகளுக்கும் ஒய்வு கொடுக்கும் அருமையான செயல்பாடு என்றும், நோன்பு இருப்பதனால் உடலில் மிகப்பெரும் மாற்றத்தை உணர்வதாகவும் தன் அனுபவத்தை சொல்கிறார். எத்தனையோ மதங்கள் நோன்பை வலியுறுத்தினாலும், இஸ்லாம் கூறும் நோன்பில் ஓர் ஒழுங்கும், கால வரையறையும், கட்டுப்பாடும் இருப்பதனால் இந்த நோன்பை தான் கடைபிடிப்பதாக கூறுகிறார். (https://www.youtube.com/watch?v=JebZnuuqLJM&feature=youtu.be)
அரசியல் ரீதியாக மட்டுமின்றி பண்பாட்டுத் தளத்திலும் முஸ்லிம்களுடன், தான் ஒன்றியிருக்க விரும்புவதாகவும், அத்தகைய இரண்டறக் கலந்த உறவே சமூக மாற்றத்துக்கு வழிவகுக்கும் என்றும் சொல்கிறார். கடவுள் நம்பிக்கையே இல்லாத பெரியார், தன் நண்பர் ரசிகமணியின் 60-ஆம் கல்யாணத்துக்காக முருகன் கோயிலுக்குச் சென்றதை நினைவு கூரும் அவர், தான் மதம்மாறவில்லை எனினும் இஸ்லாமிய மக்களின் நம்பிக்கைகளை மதிப்பதாகவும், அவற்றில் பிடித்தவற்றை பின்பற்றுவதாகவும் கூறுகிறார்.
இன்று காலை சென்னையில் எனது இல்லத்தில் நடைபெற்ற 'ஸஹர்' விருந்தில், கட்சித் தோழர்களுடன் பங்கேற்று நோன்பு வைத்தார் தலைவர்.
Aloor Shanavas
நன்றி Aloor Shanavas அவர்களுக்கு
ஜூலை 19 (19 Jul 2014)தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நோன்பு மேற்கொண்டு வருகிறார் அதனை தொடர்ந்து இந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொது செயலாளர் ஆளுர் சாநவாஸ் அவர்களின் இல்லத்தில் விடியற்காலை 3மணியளவில் இரண்டாவது நாளாக சஹர் நிகழ்வுவில் பங்கேற்றார் .மாலை திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் H .P.M திருமண மண்டபத்தில் இப்தார் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.
No comments:
Post a Comment