சிலதினங்களாக நான் சென்று வருகிறேன்
நல்ல பல தரவுகள் குவிந்து கிடக்கின்றன ஒரு பெரும் செல்வந்தனாக இல்லையே என்ற
ஏக்கம் எனக்குள் நிரம்பி வழிகின்றது
இன்று(15-1-2015)மாலை6- மணி அளவில் மலைகள் பதிப்பகம் ஸ்டாலில்
நண்பர் நிஷா மன்சூரின்"நிழலில் படரும் இருள்" என்ற கவித் தொகுப்பு வெளியிடப்பட்டது
இனிய நண்பர் நிஷா மன்சூரின் கரங்களால் அவர் புத்தகத்தைப் பெற்றுக் கொண்டேன்
மறவாமல் கவிஞர் என்னிடம் கேட்டார்,
"நீங்கள் காயிதெ மில்லத் பேரர்தானே"?என்று.
நான் "ஆம்"என்றேன்
உறவுமுறையிலும் இது உண்மைசொந்தக்
உணர்வு முறையிலும் இது நிஜம்
எனினும் எனக்கென்று ஒரு சொந்தக்
கருத்துண்டு
"சாதனையாளர்கள் எங்கள் முன்னோர்கள் அவர்களின் ரத்த
பந்தங்கள் நாங்கள்"எனச் சொல்லிக்
கொள்வதில் எனக்குப் பூரணமான
உடன்பாடு கிடையாது
இதை ஆணவச் செருக்கில் சொல்லிக் கொள்ளவில்லை
மக்களுக்குச் சேவை செய்வதையே
வாழ்வாக்கிக் கொண்ட அந்தப் பென்னம் பெரியவர்களின் வழிவாறு நாங்கள் என்பதில் மகிழ்ச்சி இருந்தாலும்
அது என்னை அறிமுகப் படுத்திக்
கொள்வதற்கு ஒரு அடையாளமாக
இருக்கும்வரை ஆபத்தில்லை
அதனை ஒரு சலுகைக்காகவும்
பெருமிதத்துக்காகவும் நான் சொல்லித்
திரிந்தாலோ அல்லது பிறர் சொல்லக்
கேட்டுப் பூரிப்படைந்துகொண்டாலோ
அந்தச் சாதனையாளர்களுக்குத் தீங்கிழைத்து விட்டவனாக ஆகிவிட்டேனோ என்கிற பயம் எனக்குள்
எழுகிறது
எனவே ஒரு சின்ன விளக்கம் சொல்ல
வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகி விட்டேன்

