Showing posts with label மது. Show all posts
Showing posts with label மது. Show all posts

Wednesday, August 5, 2015

குடி கெடுக்கும் குடியரசுகள்


அல்குர்ஆனின் வழியில் அறிவியல்……

இஸ்லாம் தடை செய்யும் தனி மனித, சமூகத்தீமைகளில் முதன்மையானது மது. குடி குடியைக் கெடுக்கும் என்று கூறுவதன் பொருள் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.ஆகவேதான் மதுவை தீமைகளின் தாய் என்று கூறுகிறார்கள். மதுவால் பெற்றேடுக்கப்படும் பிள்ளைகள், நோய்,வறுமை, ஒழுக்கக்கேடு, குற்றச்செயல், வன்முறை, கொலை கொள்ளை,குடும்பசீரழிவு என்று சொல்லிக்கொண்டே போகலாம்.அல்லாஹ் கூறுகின்றான்,

    “சாராயத்தைப்பற்றியும், சூதாட்டத்தைப்பற்றியும், அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள், நீர் கூறும், இவ்விரண்டிலும் பெரும் பாபம் இருக்கின்றது.மனிதர்களுக்கு சில பயன்களுமிருக்கின்றன. ஆனால் அவ்விரண்டிலுள்ள பாபம், அவ்விரண்டிலுள்ள பயனை விடப்பெரிது.” அல்குர் ஆன்-2:219

மது குடிப்பதால் சில பயனுண்டு என்று அல்குரான் கூறுவதை, இன்றைய நவீன அறிவியல் உலகம் ஏற்றுக்கொண்டுள்ளது.அதாவது இதய நோய் மற்றும் மாரடைப்பு (Coronary Heart Diesease) வராமல் தடுப்பதில் சிறிது பங்குண்டு.ஆயினும் இப்படி சிறிது மது குடிப்பவனின் நிலமை,ஒருவன் செங்குத்தாக வழுக்குப்பாறையில் ஏறுவதற்க்குச்சமம்.எந்த நிலையிலும் அவன் சறுக்கிவிலலாம் உயிருக்கு ஆபத்து.ஆகவேதான் இதில் பல மடங்கு தீமை உள்ளது என்று அல்லாஹ் தடை செய்கின்றான்.

Monday, January 12, 2015

:"மது" தனிமனித & சமுதாய கேடு

இரண்டு வருடங்களுக்குமுன் எமது தாயார் பஞ்சாயத்து தேர்தலில் நின்றபொழுது என் நண்பர் என்னை அழைத்து "பசங்களுக்கு சரக்கு வாங்கி தந்தால் நிச்சயம் ஜெய்த்துவிடலாம்" என்றார். அதற்க்கு அவர் தோற்பதை நான் பெருமையாக கருதுகிறேன் என்று கூறிவிட்டேன். தனிமனித இழப்புகள் சமுதாய இழப்புகளைவிட பெரிதல்ல என்பதை நாம் உணரவேண்டும்.

இஸ்லாமிய மார்கத்தை ஏற்க்கும் முன் எனக்கும் குடிப்பழக்கம் இருக்கத்தான் செய்தது அதற்க்கு காரணம் அது அவமான சின்னமாக என் சமுதாயத்தில் இருந்ததில்லை. ஊரும் சமுதாயமும் குடும்பங்களும் அதனை ஏற்று பழகிஇருந்தது, எனவே குடியில் பெரும் நாட்டம் இல்லாத எனக்கும் அந்த பழக்கம் இருக்கத்தான் செய்தது. ஆனால் இஸ்லாமிய சமுதாயம் என்னை மாற்றியது! எந்தவொரு மத விழாக்களின்பொழுதும் டாஸ்மாக் நிரம்பி வழிவதையும் பார்க்க முடியும்! ஆனால் இஸ்லாமிய பண்டிகையை கவனித்தவர்களுக்கு தெரியும் குடி பழக்கமு உள்ள ஒருசிலரும் அன்று குடிப்பதை விடுத்து தொழுகைக்கு சென்று விடுவார். ஆனால் மற்ற சமுதாயத்தில் குடிபழக்கம் இல்லாத சிலரும் விழா நாட்கள் அன்று போதைக்கு விலையாகிவிடுவார்.ஒரு முறை குடித்தால் அந்த இஸ்லாமியர் அந்த மது ரத்தத்தில் இருக்கும் வரை அவர் தொழ முடியாது மேலும் 40 நாட்களின் தொழுகை பாழாகி போகும் என்பதை ஒவ்வொரு இஸ்லாமியர்க்கும் தெரியும். எனவே இறையச்சம் அதிகம் கொண்ட சமுதாயத்தில் குடி பழக்கம் வெகு குறைவு, குடிப்பவர் கூட அதை வெளிப்படுத்த வெட்கப்படுவார்.

Tuesday, February 15, 2011

மீலாதுன் நபி! டாஸ்மாக் மதுகடைகளுக்கு விடுமுறை!

சென்னை: நபிகள் நாயகத்தின் பிறந்த தினத்தை ஆண்டு தோறும் உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் கொண்டாடி வருகின்றனர். இதனை முன்னிட்டு நாளை பிப்ரவரி 16 ஆம் தேதி மீலாது நபி தினமாக  கொண்டாடப்படுகிறது. இதை மத்திய அரசு விடுமுறை நாளாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. டாஸ்மாக் மதுபான கடைகளும் தமிழகம் முழுவதும் விடுமுறை அறிவித்துள்ளது அரசு. இதனை மீறி மதுபான கடைகள் திறக்கப்பட்டிருந்தால் விற்பனையாளர், மேற்பார்வையாளர் உட்பட கடைக்கு சம்மந்தப்பட்ட பலரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.


கடைக்கு அருகில் இயங்கும் பார்களிலும் மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது மீறி விற்றால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவித்துள்ளது.
Source : http://www.inneram.com/2011021513572/miladunabi-celebration-national-holiday-tasmak-closed-in-tamilnadu

LinkWithin

Related Posts with Thumbnails