Thursday, September 6, 2012

இளவரசியுடன் கைகுலுக்க ஈரான் ஒலிம்பிக் வீரர் மறுப்பு!


லண்டனில் பாராலிம்பிக் போட்டி பரிசளிப்பு விழாவில், ஈரான் நாட்டைச் சேர்ந்த  மாற்றுத் திறன்  வீரர் ஒருவர் பிரிட்டிஷ் இளவரசி கேத்மிடில்டனுடன் கைகுலுக்க மறுத்துள்ளார்.இஸ்லாமிய மரபுகளின் படி அந்நிய எதிர்பாலினருடன் ஆணோ, பெண்ணோ கைகுலுக்குவதில்லை என்பதால் இவ்வாறு அந்த வீரர் நடந்துகொண்டுள்ளார் என்று சொல்லப்பட்டது.

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஒலிம்பிக் ஸ்டேடியத்தில் மாற்றுத் திறன் வீரர்களுக்கான பாராலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் வெற்றி கண்ட வீரர்களுக்கு பரிசளிக்கும் விழா கடந்த ஞாயிறன்று நடந்தது. பிரிட்டிஷ் அரச குடும்பம் சார்பில் இளைய இளவரசர் வில்லியமின் மனைவி கேத் மிடில்டன் கலந்து கொண்டு வீரர்களுக்கு பரிசுகளையும் பதக்கங்களையும் வழங்கினார். வீரர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் வீரர்களுடன் இளவரசி கேத் கைகுலுக்கிபாராட்டுகளையும் தெரிவித்தார்.


தடகளப் போட்டியில் ஈரான் வீரர்  மெர்தாத் கரம் சேத் (40) என்பவர் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். மெர்தாத்தைப் பாராட்டி பதக்கத்தை அணிவித்த இளவரசி கேத்மிடில்டன், அவருக்குக் கைகொடுத்தார். ஆனால் ஈரான் வீரர் கைகுலுக்க மறுத்து பதக்கத்தைப் பெற்றுக் கொண்டு சென்று விட்டார். ஈரான் வீரரின் இந்த செயல் விழா மேடையில் அனைவரையும் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டிஷ்  அரச குடும்ப  வட்டாரங்கள், ‘இஸ்லாமியர் ஆணோ பெண்ணோ  அந்நிய எதிர்பாலினத்தவருடன் கைகுலுக்குவதில்லை, இது புரிந்துகொள்ளத் தக்கதே ’ என்று தெரிவித்தனர்

Source : http://www.inneram.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails