Friday, September 28, 2012

ஏன் இந்த இரைட்டை நிலைபாடு?

அமெரிக்கா கூறுவதுபோல உண்மையான கருத்து சுதந்திரம் அங்கு இருக்குமானால் ஏன் இந்த இரைட்டை நிலைபாடு?
அசாஞ்ச் அமெரிக்காவின் எதிரி – அமெரிக்க இராணுவம் அறிவிப்பு!
தற்போது அமெரிக்காவின் போலி கருத்து சுதந்திரத்துக்கும் இஸ்லாமிய விரோத போக்குக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இநத விக்கிலீக்ஸ் ஆசிரியர் ஜீலியன் அசாஞ்ச். அமெரிக்கா கூறுவதுபோல உண்மையான கருத்து சுதந்திரம் அங்கு இருக்குமானால் ஏன் இந்த இரைட்டை நிலைபாடு?

ஒரு பக்கம் அல்லாஹ்வின் தூதரை இழிவு படுத்தும் படத்தை தடை செய்ய முடியாது அது கருத்து சுதந்திரம என்று வாய்கிழிய பேசும் அமெரிக்கா மறுபக்கம் அமெரிக்காவின் திருட்டுத்தனத்தை உலகுக்க  ”விக்கி லீக்ஸ்’ இணைய தளத்தின் மூலம் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச். அவரை பழிவாங்க துடிப்பது ஏன் ? கருத்து சுதந்திரம என்றால் இதை மட்டும் எதிர்ப்பது இரட்டை வேடம் இல்லையா?


அமெரிக்காவின் எதிரி அசாஞ்ச் என, அந்நாட்டு ராணுவ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ராணுவ ரகசியங்களை, “விக்கி லீக்ஸ்’ இணைய தளத்தின் மூலம் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜூலியன் அசாஞ்ச்.

தற்போது, அசாஞ்ச், லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் அடைந்து உள்ளார். அவரை தூதரகம் உள்ளே சென்று கைது செய்தால் அது தற்கொலைக்கு சமம் என்று கடந்த வாரம ஈக்வடார் நாடு அறிவித்து இங்கு இருந்தது குறிப்பிடதக்கது.

ஈக்வடார் தூதரகத்தில் இருந்த படி, “வீடியோ கான்பரன்ஸ்’ மூலம் அவர் நேற்று, ஐ.நா சபையில் கூடியிருந்த பல்வேறு நாட்டுத் தூதர்களிடம் பேசினார்.

அப்போது அவர், அமெரிக்கா அதிபர் ஒபாமாவைக் கடுமையாக விமர்சனம் செய்தார்.அமெரிக்க ராணுவம், அசாஞ்ச்சை எதிரியாக அறிவித்துள்ளதாக, ஆஸ்திரேலிய பத்திரிகை செய்தி வெளியிட்டு உள்ளது.”தலிபான்கள், அல்-குவைதா பயங்கரவாதிகளை எதிரியாகக் கருதும் அமெரிக்கா, இவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனையை அளிக்கும். இந்தப் பட்டியலில் தான் அசாஞ்சையும் வைத்திருக்கிறது’ என, இந்த பத்திரிகை தெரிவித்து உள்ளது.

Source : http://niduri.com/?p=2439

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails