Friday, September 28, 2012

படித்தேன் பிடித்தேன் (பகுதி-4)

by anbudan buhari

படித்தேன் பிடித்தேன் 010 

தவறாகப் புரிந்துகொள்ளும் உலகுக்கு
இஸ்லாத்தைச் சரியாக எடுத்துக் கூறுவது எப்படி?

இஸ்லாத்தின் பண்புகளாகவே
முஸ்லிம்கள் ஆவது ஒன்றுதான் அதற்கான ஒரே வழி

அன்பு அமைதி கருணை ஈகை அறிவு ஆகிய
இஸ்லாத்தின் அடிப்படைக் குணங்களோடு
உலகத்தாரோடு உறவாடவேண்டும்

மென்மையான இஸ்லாத்தின் மேன்மைகளையும்
உண்மையான இஸ்லாத்தின் உயர்வுகளையும்
வாழ்ந்து காட்ட வேண்டும்




 படித்தேன் பிடித்தேன் 011

ஜமாத் என்றால் இஸ்லாமிய அடிப்படையில் மக்களுக்குத் தீர்வு தரும் பஞ்சாயத்து போன்றதொரு அமைப்பு.

இதில் பங்கெடுக்க பெண்களுக்கு அனுமதி இல்லை.

ஆனால் முகம்மது நபி காலத்தில் ஜமாத்தில் பெண்கள் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது.

இஸ்லாம் பெண்களுக்கு அளித்த உரிமைகளை இன்றைய அடிப்படை வாதிகள் வழங்க மறுக்கிறார்கள்.

இதனால் ”தமிழ்நாடு முஸ்லிம் பெண்கள் முன்னேற்றக் கழகம்” போன்ற முற்போக்கு பெண்கள் இயக்கத்தினர், பெண்களுக்கென்று தனியே பள்ளிவாசல்களைக் கட்ட முயற்சிக்கின்றார்கள்.

பெண்கள் பங்கெடுக்காததால் விவாகரத்து வழக்குகளில் ஜமாத்தின் முடிவுகள் பெண்களுக்குத் தீமையாக அமைகின்றன என்று இவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தமிழ்நாட்டில் முதன் முதலாக, மதுரையில் கே கே நகர் பள்ளிவாசலில் ஜமாத்தின் உறுப்பினராக 59 வயதான, அரசு கல்லூரியில் முதல்வராக பணியாற்றி ஓய்வு பெற்ற நான்ஜிம் பரகத் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது வரவேற்கப்படவேண்டியது.


படித்தேன் பிடித்தேன் 012

உலகக் கல்வியில் அறிவு பெருகும் போதும்
மார்க்கக் கல்வியில் தெளிவு பெறும்போதும்
ஒரு சில உள்ளங்களில் தேங்கிக்கிடக்கும்
அடிப்படை வாதமும் செயலிழந்து போகும்
அந்த இருள் விலக்கும் ஒளியில்
உண்மையான இஸ்லாம் பிரகாசிக்கும்

Source :  http://anbudanislam2012.blogspot.in/2012/09/009.html
 படித்தேன் பிடித்தேன்
 படித்தேன் பிடித்தேன் (பகுதி-2)
படித்தேன் பிடித்தேன் (பகுதி-3)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails