குர்ஆனை ஓதுதல்
இறைவன் முகம்மது நபியைத் தனக்கான
ஊடகமாய் ஆக்கிக்கொண்டு மனித வாழ்க்கை
நெறிகளை செம்மையாய் வகுத்துக் கொடுத்தான்
அந்த உபதேசங்களின் தொகுப்புதான்
குர்ஆன்
*
இறைவனின் திருமறைக்கு எத்தனையோ
பெயர்கள்
ஆனால் அந்தத் திருமறையிலேயே பல முறை
குறிப்பிடப்பட்டுள்ள “குர்ஆன்” என்ற பெயரே
சிறப்புப் பெயராய் ஆகி அழைக்கப்படுகிறது
“குர்ஆன்” என்ற அரபிச் சொல்லுக்கு “ஓதப்பட்டது”
என்று பொருள்.
*
அரபி அல்லாத வேறு எந்த மொழியில் குர்ஆன்
இறக்கப்பட்டிருந்தாலும் அதை அப்படியே
மனப்பாடம் செய்து மக்களுக்கு முகம்மது நபி
அவர்களால் ஓதிக் காட்டி இருக்க முடியும்
ஆனால் குர்ஆன் முகம்மது நபிக்குத் தெரிந்த
ஒரே மொழியான அரபி மொழியில் மட்டுமே
இறக்கப்பட்டது
குர்ஆன் அரபி மொழியில் இறக்கப்பட்டதற்கான
காரணங்கள் இரண்டு
ஒன்று:
குர்ஆன் எவரின் வழியாக இறக்கப்படுகிறதோ
அவருக்கு அது புரியவேண்டும்
இரண்டு:
குர்ஆன் எவர்களுக்காக இறக்கப்படுகிறதோ
அவர்களுக்கும் புரியவேண்டும்
குர்ஆனை மனப்பாடம் செய்வது சிறப்பு
ஆனால் குர்ஆனை விளங்காமல் ஓதுதல்
கூடவே கூடாது
ஒவ்வொரு வசனத்தையும் ஓதும்போது
அதன் பொருளை ஆழமாக உள்வாங்கிக்
கொள்ளுதல் வேண்டும்
ஆழமாக உள்வாங்கியவற்றை வாழ்க்கையில்
பயன்படுத்துதல் வேண்டும்
சில வசனங்கள் புரியாதவைபோல் இருந்தால்
மீண்டும் மீண்டும் அதை ஓதுதல் வேண்டும்
குர்ஆனை ஓதுதலுக்கான ஒரே காரணம்
அதன் வசனங்களை விளங்கிக் கொள்வதும்
அவற்றைப் பின்பற்றுவதும்தான்
குர்ஆனைக் கருத்தில் ஏற்றிக்கொள்ளாமல்
வேகமாக ஓதுதால் கூடாது
அன்புடன் புகாரி
Source : {அன்புடன் இஸ்லாம்} குர்ஆன் ஓர் எளிய அறிமுகம்
No comments:
Post a Comment