நபி(ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களுக்கும், அவர்களின் தோழர்களுக்குமிடையில் எவ்விதத் திரையும் இருக்கவில்லை. நபி(ஸல்) அவர்களும், நபித் தோழர்களும் பள்ளியிலும், கடைவீதியிலும், பிரயாணத்திலும் கலந்தே வாழ்ந்தார்கள். எந்த சந்தர்ப்பத்திலும் நபி(ஸல்) அவர்களை நேரடியாகவோ சந்தித்து உரையாடும் வாய்ப்பை நபி தோழர்கள் பெற்றிருந்தனர்.
நபி(ஸல்) அவர்களுடைய ஒவ்வொரு சொல்லையும் செயலையும் மிக உன்னிப்பாகவும், மிகக் கவனமாகவும் பேணி வந்தார்கள். அறியாமை என்னும் காரிருளில் கிடந்த அவர்களுக்கு எந்த நபியின் மூலமாக அல்லாஹ் நேர்வழி காட்டினானோ அந்த நபியைத் தங்களின் இவ்வுலக மறுவுலக வாழ்க்கையின் வழிகாட்டியாகப் பெற்றதினால் தான் அவர்களின் சொல், செயலுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள். எந்த அளவிற்கு நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களின் சொல் செயல்களைக் கண்காணித்து வந்தார்கள் என்றால், நபி(ஸல்) அவர்களின் அருகாமையில் இருக்கும் சந்தர்ப்பம் கிடைக்காதபோது வேறு தோழர்களைத் தங்களுக்குப் பகரமாக ஆக்கி, நபி(ஸல்) அவர்களிடமிருந்து என்னென்ன சொல், செயல்கள் நிகழ்கின்றன என்பதைக் கண்காணித்து அவற்றைப் பின்னர் தமக்குக் சொல்லுமாறு கூறுவார்கள்.
Showing posts with label நபி(ஸல்). Show all posts
Showing posts with label நபி(ஸல்). Show all posts
Monday, September 10, 2012
Friday, December 16, 2011
'அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?'
ஸஹீஹுல் புகாரி
மூலம் : இமாம் அபூ அப்தில்லாஹ் என்ற முஹம்மத் அல் புகாரி அவர்கள்
தமிழில் : உத்தமபாளையம், மவ்லவி எம்.எம். அப்துல் காதிர் உமரி அவர்கள்
மூலம் : இமாம் அபூ அப்தில்லாஹ் என்ற முஹம்மத் அல் புகாரி அவர்கள்
தமிழில் : உத்தமபாளையம், மவ்லவி எம்.எம். அப்துல் காதிர் உமரி அவர்கள்
7. (குறைஷிகளின்
தலைவர்) அபூ சுஃப்யானிடமும் குறைஷிகளில் இறைமறுப்பாளர்களிடமும் நபி(ஸல்)
அவர்கள் (ஹுதைபிய்யா என்ற இடத்தில்) ஓர் உடன்படிக்கை செய்திருந்தார்கள்.
அச்சமயத்தில் (குறைஷிகளில் சிலர்) ஒட்டகங்களில் வியாபாரிகளாக சிரியான
நாட்டிற்குப் போயிருந்தார்கள். அந்தக் குறைஷி வணிகக் கூட்டத்தில் ஒருவராகச்
சென்றிருந்த அபூ சுஃப்யானை (ரோமபுரி மன்னர்) ஹெர்குலிஸ், பைத்துல்
முகத்தஸ் ஆலயத்தில் முகாமிட்டிருந்த தம்மிடம் அழைத்து வரும்படித் தூதரை
அனுப்பினார். அந்தத் தூதர்கள் அபூ சுஃப்யானிடம் வந்து சேர்ந்தார்கள்.
ரோமாபுரியின் அரசப் பிரதிநிதிகள் சூழ அமர்ந்திருக்கும் தம் அவைக்கு
அவர்களை அழைத்திருந்தார். மன்னர் தம் மொழி பெயர்ப்பாளரையும் அழைத்து
வரக்கூறினார்.
அபூ சுஃப்யான் இது குறித்துக் கூறும்போது, (எங்களிடம்) மன்னர் 'தம்மை இறைவனின் திருத்தூதர் என்று கருதிக் கொண்டிருக்கும் அம்மனிதருக்கு உங்களில் மிக நெருங்கிய உறவினர் யார்?' எனக் கேட்டார். நானே அவருக்கு மிக நெருங்கிய உறவினன் எனக் கூறினேன். உடனே மன்னர், (தம் அதிகாரியிடம்) 'அவரை என் அருகே அழைத்து வாருங்கள்; அவருடன் வந்திருப்பவர்களையும் என் பக்கத்தில் கொண்டு வந்து அவருக்குப் பின்னால் நிறுத்துங்கள்' என்று ஆணையிட்டார். பின்னர் தம் மொழி பெயர்ப்பாளரிடம், 'நான் அந்த மனிதரைப் பற்றி (அபூ சுஃப்யானிகிய) இவரிடம் கேட்பேன். இவர் என்னிடம் பொய்யுரைத்தால் அதை என்னிடம் கூறி விட வேண்டும் என்று அவருடன் வந்திருப்பவர்களிடம் மொழி பெயர்த்துச் சொல்' என ஆணையிட்டார். நான் பொய் கூறினார்கள் என இவர்கள் சொல்லி விடுவார்களோ என்ற நாணம் மாத்திரம் அப்போது எனக்கு இல்லை என்றால் இறைவன் மீது ஆணையாக நபி(ஸல்) அவர்களைப் பற்றிப் பொய்யுரைத்திருப்பேன்.
பிறகு மன்னர் என்னிடம் கேட்ட முதல் கேள்வி, 'உங்களில் அவரின் குலம் எத்தகையது?' அதற்கு, அவர் எங்களில் சிறந்த குலத்தைச் சார்ந்தவர் என்றேன். 'இவருக்கு முன்னர் உங்களில் யாரேனும் எப்போதாவது இந்த வாதத்தைச் செய்ததுண்டா?' என்று கேட்டார். இல்லை என்றேன். 'இவரின் முன்னோர்களில், எவரேனும் மன்னர்களாக இருந்திருக்கிறார்களா? என்றார். இல்லை என்றேன். 'அவரைப் பின்பற்றுவோர் மக்களில் சிறப்பு வாய்ந்தவர்களா? அல்லது சாமானியர்களா?' என்றார். மக்களில் சாமானியர்கள் தாம் என்றேன். 'அவரைப் பின்பற்றுவோர் அதிகரிக்கின்றனரா? அல்லது குறைகின்றனரா?' என்று வினவினார். அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர் என்றேன். '

Thursday, June 23, 2011
நபி (ஸல்) அவர்களுடைய வஹியின் ஆரம்ப நிலை!
“நபி(ஸல்) அவர்களுக்குத் துவக்கத்தில் இறைச்செய்தி தூக்கத்தில் தோன்றும் நல்ல கனவுகளிலேயே வந்தது. அப்போது அவர்கள் எந்தக் கனவு கண்டாலும் அது அதிகாலைப் பொழுதின் விடியலைப் போன்று தெளிவாக இருக்கும்.
பின்னர் தனிமையிலிருப்பது அவர்களின் விருப்பமாயிற்று. ஹிரா குகையில் அவர்கள் தனித்திருந்தார்கள். தங்களின் குடும்பத்தாரிடம் திரும்பி வருவதற்கு முன் பல இரவுகள் (அங்கே தங்கியிருந்து) வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்கள். அந்த நாள்களுக்கான உணவைத் தம்மோடு கொண்டு செல்வார்கள். (அது முடிந்ததும்) மீண்டும் (தங்களின் துணைவியார்) கதீஜா(ரலி) அவர்களிடம் திரும்புவார்கள். அதே போன்று பல நாள்களுக்குரிய உணவைக் கொண்டு செல்வார்கள். இந்த நிலை ஹிரா குகையில் அவர்களுக்கு சத்தியம் வரும் வரை நீடித்தது.
(ஒருநாள்) ஒரு வானவர் அவர்களிடம் வந்து, ‘ஓதும்’ என்றார். அதற்கவர்கள் ‘நான் ஓதத் தெரிந்தவனில்லையே!’ என்றார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இந்நிலையைப் பின் வருமாறு விளக்கினார்கள்.
“அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டுவிட்டு மீண்டும் ‘ஓதும்’ என்றார்.
(அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன். இரண்டாவது முறையும் அவர் என்னைப் பிடித்து நான் சிரமப்படும் அளவிற்கு இறுகக்கட்டி அணைத்து என்னை விட்டுவிட்டு மீண்டும் ‘ஓதும்’ என்றார்.
(அப்போதும்) நான் ஓதத் தெரிந்தவனில்லையே! என்றேன்.
அவர் என்னைப் பிடித்து மூன்றாவது முறையும் கட்டி அணைத்துவிட்டுவிட்டு, ‘படைத்தவனாகிய உம்முடைய இரட்சகனின் திருப்பெயரால் ஓதும்! அவனே மனிதனை ‘அலக்’கில் (கருவளர்ச்சியின் ஆரம்பநிலை) இருந்து படைத்தான். ஓதும்! உம்முடைய இரட்சகன் கண்ணியம் மிக்கவன்’ என்றார்.”
மேலும், ஆயிஷா (ரலி) கூறினார்.
பிறகு இதயம் படபடத்தவர்களாக அந்த வசனங்களுடன் (தம் துணைவியார்) குவைலிதின் மகள் கதீஜா(ரலி) விடம் நடந்த செய்தியைத் தெரிவித்துவிட்டுத் தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள்.
அப்போது கதீஜா (ரலி) அவர்கள்,
‘அவ்வாறு கூறாதீர்கள்; அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்தமாட்டான்; (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள்; (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகிறீர்கள்’ என்றார்கள்.
Subscribe to:
Posts (Atom)