சலீம்தமிழக முஸ்லிம்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றம் ஆகியவற்றை இலக்காகக் கொண்டு களப் பணியாற்றி வருபவர் சகோதரர் சி.எம்.என் சலீம். கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் நலிந்த நிலையிலிருக்கும் சமுதாயத்தின் முன்னேற்றத்துக்காக அடுத்த தலைமுறையினரின் எதிர்காலத்தை இலட்சியமாகக் கொண்டு சிறப்பான திட்டமிடலுடன் செயலாற்றி வரும் சகோதரர்
சகோதரர் CMN சி.எம்.என் சலீமுடனான கலந்துரையாடலை, சத்தியமார்க்கம்.காம் வாசகர்களுக்கு அளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
Showing posts with label தமிழக முஸ்லிம். Show all posts
Showing posts with label தமிழக முஸ்லிம். Show all posts
Tuesday, September 11, 2012
Tuesday, April 12, 2011
நீடூரில் மருத்துவக் கல்லூரி: கவனத்தில் கொள்ள வேண்டியவை…!
தமிழக முஸ்லிம் சமுதாயம் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்ற வேட்கையுடன் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுயநலம் இல்லாமல் உழைத்த தியாகிகளின் நிகரில்லா தியாகத்தின் வெளிப்பாடுதான் இன்றைக்கு முஸ்லிம் சமுதாயம் ஓரளவிற்கு விழிப்புணர்வு பெற்று வரும் காட்சி. அடுத்த தலைமுறை இஸ்லாமிய அடிப்படையில் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தங்களின் சொத்துக்களை எழுதி வைத்து பல கல்வி நிறுவனங்களை உருவாக்கிய வள்ளல் பெருமக்கள் வாழந்த மண் இது.
கருத்தராவுத்தர் அப்பா, காதிர் முகைதீன் அப்பா, ஜஸ்டிஸ் பஷீர் அகமது, பெரியவர் ஜமால் முகம்மது போன்ற பல தன்னலமற்ற தியாகிகள் உருவாக்கிய கல்வி நிறுவனங்களில் தான் இன்றைய தலைமுறை கல்வி பயின்று வருகிறது. இந்த நிறுவனங்கள் சிலவற்றின் இன்றைய செயல்பாட்டில் பலருக்குத் திருப்தி இல்லையென்றாலும் கூட உருவாக்கியவர்களின் உயர்ந்த தியாகத்தை யாராலும் மறுக்க இயலாது. அது இறைவனுடைய பொருத்தத்தைப் பெற்றது என்பதில் சந்தேகமில்லை.
இவையெல்லாம் 1950-1970 வரை வாழ்ந்த வள்ளல் பெருமக்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஓய்வறியா உழைப்பின் வெளிப்பாடு.
Labels:
தமிழக முஸ்லிம்,
நீடூர்,
மருத்துவக் கல்லூரி
Subscribe to:
Posts (Atom)
