இலட்சோப இலட்சம் அளவுக்கு கருணையின் வடிவாக விளங்கும் பேரிறைவன், அறியாமல் அவன் மக்கள் செய்யும் சில தவறுகளை பிழைகளை தப்புகளை மன்னிக்காமல் இருந்து விடுவானா?
அதற்கெல்லாமும் நாளை மறுமையில் குற்றம் பிடிப்பான் என்று விளக்கம் தர இங்கே யாராவது முயன்றால்......
என் கோபத்தை என் கருணை மிகைத்துவிடும் என்று அவனே தன்னைப்பற்றி கூறி இருப்பது பொய்யாகி விடுமே. இல்லை தவறுகளுக்கு தண்டனை காட்டாயம் உண்டு என்று சொல்ல வந்தால், அவனின் இயல்பை அவனே மாற்றிக் கொள்வான் என்று கூறுவது போலாகாதா? அப்படி மாற்றிக் கொண்டால், மனிதனுக்கும் இறைவனுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடாதா?
என் உறுதியான நம்பிக்கை அவன் நம் தாய்மார்களை விட கருணையில் மேலானவன், அதனால் நிச்சயம் மன்னிப்பவனே !
No comments:
Post a Comment