மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர்
பதவி ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் தேர்தலில் போட்டி! வேட்பாளர்களின் மனதினை ஆராய வேண்டும். கிராமங்களில் பல அறிமுகங்கள் போட்டி! பணம் சேர்க்கவா! தோற்றாலும் பரவாயில்லை
நமது பெயரும் பிரபலமாக வேண்டும் என்ற எண்ணமா! அல்லது புகழ் நாடியா! ' என்
கண் ஒன்று போவதை விட அவன் கண் இரண்டும் போக வேண்டும்' தான் வெல்வதைவிட அவன் தோற்பதே முக்கியம்! இப்படி பல கொள்கைகள் பரந்து
மக்களை குழப்பத்தில் திணற வைக்கும் தேர்தல்
விளையாட்டு.
யார் ஒற்றுமையாக இருந்தாலும் முஸ்லிம்கள் மட்டும் ஒற்றுமையாக
செயல்பட மாட்டார்கள் என்பது உறுதி . இதனை முஸ்லிம்கள் அதிகம் உள்ள
கிராமங்களில் பல முஸ்லிம் நண்பர்கள் போட்டியிடுவதனை பார்க்கலாம். நாம் தோற்றாலும் பரவாயில்லை அவன் வரக் கஊடாது என்ற தாழ்வு மனபாண்மையும் குரோத எண்ணங்களும் ஏன்!
கூட்டணி காண முயற்சிகள்
மேற்கொண்டிருக்க வேண்டும்.முஸ்லிம் அமைப்புகளான 1. தமிழ் நாடு ஜமாத்துல் உலமா சபை, 2. பாப்புலர்
ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, 3. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா, 4.
இந்தியன் நேஷனல் லீக், 5. சுன்னத் ஜமாஅத் ஐக்கியப் பேரவை, 6. தேசிய லீக்
கட்சி, 7. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், 8. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த், 9. ஆல்
இந்தியா மில்லி கவுன்சில், 10. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக், 11. ஷரிஅத்
பாதுகாப்பு பேரவை, 12. வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா, 13. இஸ்லாமிய
விழிப்புணர்வுக் கழகம், 14. இஸ்லாமிய இலக்கியக் கழகம் 15. முஸ்லிம் லீக்,16 தா.மு. மு க.17தவ்ஹீத் .இன்னபிற முஸ்லிம் அமைப்புகளானவைகள் அரசியல்
களத்தில் என்று ஒன்று சேரும்.கூட்டணி காண முயற்சிகள்
மேற்கொண்டிருக்க வேண்டும்.முஸ்லிம் கட்சி வைத்திருக்கும் அமைப்புகள்.
யாருக்கு வாக்களிப்பது?
கட்சிகளை பார்க்காதீர்கள் .தேர்தல் அறிக்கை பார்க்காதீர்கள், அறிக்கை பார்த்து படிக்கத்தான். உண்மையிலேயே
தொண்டு ஆற்றும் எண்ணம் கொண்டவர்க்கு வாக்களித்து பயனடையுங்கள். நல்லவராகவும் செயல் ஆற்றுவதில் வல்லவராகவும் இருக்க வேண்டும் இரவு ,
பகல் எந்நேரமும் பொது சேவைக்கு அவரை அழைத்தால் வருபவரா? கையழுத்து போட
பணம் கேட்பவரா? லஞ்சம் வாங்கிக் கொண்டு பணம் சேர்ப்பதற்கே தேர்தலில் போட்டி போடுபவரா ? கவணித்து செயல்படுங்கள்.
போட்டி போடும் எண்ணிக்கை கூடியது ஏன் ? பணம் சேர்ப்பதற்கே ! சேவை செய்யும் மனிதர்கள் போட்டி போட விரும்புவதில்லை.போட்டி இல்லாமல் மக்களால் விரும்பி தேர்ந்தேடுக்கும் காலம் வரவேண்டும்.
No comments:
Post a Comment