கட்சி எல்லைகளை கடந்து அனைத்து அரசியல்வாதிகள்களும் முஸ்லிம்களுக்கு எதிரான சார்பு உடையவர்களாக இருப்பதனை காண்கின்றோம். எந்த அரசியல்வாதியும் அல்லது அரசியல் கட்சிகளும் எப்போதும் முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் மற்றும் கோரிக்கைகள் பற்றி உண்மையாக கவணிப்பதில்லை.ஆனால் முஸ்லிகளின் வாக்கு அவர்களுக்கு தேவைப்படும்பொழுது பல வித வாக்குறுதிகளை தந்து முஸ்லிம்களின் மனதில் குழப்பத்தினையும் பிரிவினையையும் உண்டாக்கி விடுகின்றனர். முஸ்லிம்கள் தீவிரமாய் விசுவாசமாக அவர்கள் தேர்ந்தெடுத்த அரசியல்வாதிகளுக்கு உண்மையாக இருந்தாலும், அரசியல் பொறுத்தவரை வெறும் வாக்கு வங்கிதான். முஸ்லிம் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த எந்த அரசியல்வாதியும் கவலைப்படவில்லை.முஸ்லிம்கள் பெயரில் முஸ்லிம்களுக்காக
அரசியல் கட்சி நடத்துகிறோம் என்று சொல்பவர்களும் தங்கள் சுய
முன்னேற்றதிற்காக பொருள் சேர்ப்பதிலும் வெற்றுப் பெருமை நாடியும்
அலைகின்றனர். சிறுபான்மை மக்களை திருப்திப்படுத்தும் பேச்சு தேர்தலோடு முடிந்து விடும். நல்ல வாழ்க்கை அமைய முஸ்லிம்கள் ஒவ்வொரு சமயத்திலும் இந்த சமூகத்தில் போராட வேண்டி இருக்கிறது.
வெற்றிபெற்று ஆட்சி நடத்துபவரும் அல்லது எதிர் கட்சி வரிசையில் அமர்ந்து மக்களுக்காக உழைக்காதவர்களை சுயநலத்துடன் தன்னை வளர்த்துக் கொண்டு மக்களுக்காக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முயலாதவர்களை நாம் அவர்களை "திரும்ப அழைக்கும் உரிமை" பெற்றிருக்க வேண்டும். நமது அரசியல்வாதிகள் நம்மை "நிராகரிக்க உரிமை" பெற்றிருக்க நாம் ஏன் "திரும்ப அழைக்கும் உரிமை" பெற்றிருக்கக் கூடாது .
அன்னா ஹசாரே கருத்துக்கு அனைவரும் மொத்தத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும் அவர் சொல்வதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளை திரும்ப அழைத்துக்கொள்வது என்ற கருத்தினை ஒதுக்கிவிட முடியாது. "திரும்ப அழைக்கும் உரிமை" மக்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
இது நமது அடிப்படை உரிமையாக்கப் பட வேண்டும்.
No comments:
Post a Comment