நீங்கள் உங்கள் கடமையை செய்தீர்களா?
குறிப்பிடத்தக்க அளவு நேர்மையுடன் - ஒரு முஸ்லீம் என்று
உங்கள் விசுவாசத்தை பற்றி நிச்சயமாக உங்களுக்குள் ஒரு கேள்வி !
அல்லாஹ் மற்றும் ரசூல் வார்த்தைகள் உங்கள் கண்களில் பட்டும் காதின் வழி ஒலி வழியே மிகவும் சொல்லப்படும் தன்மானத்தின் உடன் கீழ் உடன்பட்டு உங்களை உயர்வடைய முயற்சிக்கவில்லையா!
நீங்கள் உங்கள் கடமையை செய்ய மறுக்கவும் மறக்கவும் இருந்த நிலையில் ஒரு இமாம் அல்லது ஒரு முஃப்தி போன்றவர்கள் உங்கள் கொள்கை, செயல்பாடு உயர்வடைய, கண்ணியம் காக்கப் பட உங்களுக்கு உதவி செய்யவில்லையா!
இறுமாப்பு என்ற கட்டிடம்.உங்கள்
மனதினை கல்லால் அமைக்கப் பட்டு உங்களை இழிவாக்க வழி செய்ய இடம் கொடுத்து
விட்டீர்களா! வேண்டாம் இந்த வீண் விளையாட்டும் வேடிக்கையான வாழ்வும்!
நீங்கள் உங்கள் கடமையை செய்ய குடும்ப தலைவராக வழிகாட்டும் சேவை செய்பவராக மிக சரியாக உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் வீண் விளையாட்டாக படைக்கப் படவில்லை. இறைவனது ஆற்றல் அருமையானது .
அந்த இறைவன் உங்களை ஒரு காரியத்திற்காகவே படைத்தான். உங்கள் கடமையை நீங்கள் முறையாக செயல்படுத்தாமல் இருந்து இறைவனது இனிமையான படைப்பை நாசமாக்க விரும்பினால் அது பெரிய குற்றமே!
கடமை என்பது இருவகை . ஒன்று உங்களுக்கும் இறைவனுக்கும் தொடர்புடையது
.மற்றொன்று உங்களுக்கும் மற்றவருக்கும் சார்புடையது . மற்ற மனிதருக்கு
செய்ய வேண்டிய செயலும் ஒரு கடமை என
உணர்ந்து செயல்படுங்கள் . ஒரு சக மனிதருக்கு செய்த தவறை, குற்றத்தினை இறைவனிடம் மன்னிப்பு கேட்பதில் அல்லாஹ் அனுமதிப்பதில்லை.
குற்றம் இழைக்கப்பட்டவனிடம்
பாதிக்கப் பட்டவனிடம் நம் மன்னிப்பினை பெற வேண்டும். மனிதாபிமானம் முதல்.
நம்மை படைத்தவனை தொழுபது நமது கடமை.தொழுதல் நன்றி செய்யும்
பண்பு . இது நமக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள தொடர்பு. இதிலும் தவறு வராமல் இருக்க வேண்டும் . அப்படி தவறு நிகழ்ந்து விட்டால் படைத்தவனிடம்
மனமுருகி மன்னிப்பு நாடி காலம் முழுவதும் கடமை தவறா வாழ்வு வாழ முயல்வோம்.
அதற்கு இறைவனது அருள் நாடுவோம்
No comments:
Post a Comment