الَّذِيْنَ يُؤْمِنُوْنَ بِالْغَيْبِ وَ يُقِيْمُوْنَ الصَّلٰوةَ وَمِمَّا رَزَقْنٰهُمْ يُنْفِقُوْنَۙ
அவர்கள் மறைவானவற்றை (உண்டென்று) நம்பிக்கை கொள்வார்கள். தொழுகையையும் நிலைநிறுத்துவார்கள் (தவறாது கடைபிடிப்பார்கள்). நாம் அவர்களுக்கு வழங்கிய (பொருள், செல்வம் போன்ற)வற்றிலிருந்து (தானமாக) செலவும் செய்வார்கள்.
(அல்குர்ஆன் : 2:3)
எந்த சக்தி இந்த பிரபஞ்சத்தை உருவாக்கியதோ, எந்த சக்தியால் இந்த பிரபஞ்சம் முறையாக இயங்குகிறதோ அந்த சக்தியுடன் தொடர்பு கொள்ள வேண்டும். எப்படியென்றால் நீங்கள் இறை திக்ரு தியானத்தின் மூலம் உங்கள் உள்ளொளி யாக சென்று ஆழ்மனதை அடைந்து ஆழ்மனதை பயன்படுத்தி நீங்கள் இறை சக்தியுடனும், பிரபஞ்சத்துடனும் இணைந்து தொடர்பு கொள்ள வேண்டும். அப்படி தொடர்பு கொள்ளும் உங்கள் ஆழ்மனம் உங்களுக்கு தூரத்தில் இருக்கின்ற இன்னோரு வரின் ஆழ்மனதுடன் தொடர்பு கொள்ள முடியும்.
உங்கள் உடல், உங்கள் உடலிலுள்ள சூட்சும சக்திகளால் தான் இயங்குகிறது. அந்த சக்திகளை கிரகித்துக் கொள்ள உடலில் ஏழ சக்கரங்கள் சுழல்கிறது. அந்த சக்கரம் இயற்கையாகவே தனது உடலுக்கு தேவையான சக்திகளை பிரபஞ்ச சக்திகளில் இருந்து தனது சுழற்சி மூலம் எடுத்துக் கொள்ளும். அந்த சக்கரத்தின் சுழற்சி குறைந்தால் உடலில் நோய், பிரச்சனைகள் ஏற்படும். இது உங்கள் உடலில் தினமும் நடக்கும் சூட்சும நிகழ்வு.
நீங்கள் இறை திக்ரு தியானத்தின் மூலம் உங்கள் உடலிலுள்ள சூட்சும சக்கரத்தை சுழலச் செய்து அதிகப்படியான பிரபஞ்ச சக்திகளான சூட்சும சக்திகளை பெற்றுக் கொண்டு. அப்படி பெறப்பட்ட பிரபஞ்ச சக்திகளை உங்கள் ஆழ்மனதின் மூலம் பிறருடைய நோய்களைக் குணப்படுத்த முடியும்.
உங்களுக்கு தூரத்தில் இருக்கின்ற இன்னோருவர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறபோது அவர் உடலில் என்ன கோளாறு, எந்தப் பகுதியில் கோளாறு, அதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அவருடைய ஆழ்மன அறிவு துல்லியமாகவே அறிந்திருக்கிறது. நீங்கள் அந்த நோயாளியின் ஆழ்மன அறிவைத் தொடர்பு கொண்டு அதை அறிந்து அந்த நோய் அல்லது குறைபாட்டை குணமாக்க முடியும்.
உங்களுக்கு தூரத்தில் இருக்கின்ற இன்னோரு வரின் நோயால் படும் அவதியை உங்கள் மனத்திரையில் உள்ளதை உள்ளது போலவே கண்டு, நீங்கள் இறை திக்ரு தியானத்தில் இருந்து இறை பெயரான "" يا شافي" யா ஷாfபீ"" என்ற மந்திர சொற்களோடு ஓதி பிராணிக் ஹீலிங் முறையில் சிறிது சிறிதாக அவர் குணமடைகிறார் என்ற எண்ணத்தை வலுவாக்கி, அவர் அவதிப்படும் காட்சியை மங்க வைத்து, அவர் குணமடைந்த நிலையைத் தெளிவான காட்சியாக மனத்திரையில் ஒளிரச் செய்ய வேண்டும்.
நீங்கள் இப்படி இருக்கும்போது உங்களுக்கு தூரத்தில் இருக்கின்ற இன்னோருவர் , அவர் எந்நிலையில் இருந்தாலும் அவர் பூரண குணமடைவார்.
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ
நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள இரத்த நரம்பைவிட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 50:16)
மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்
திருநெல்வேலி
No comments:
Post a Comment