Friday, October 12, 2018

உடல் முதுமை ஆன்மாவின் அனுபவம்.

ஏழு வயதில் சிறுவனாக இருந்த நான் இப்போது தும் இருக்கிறேன். ஆனால் ஏழு வயது சிறுவனாக இருந்த நான். இப்போழுது இருக்கின்ற நாற்பத்தி மூன்று வயது நான். ஏழு வயது சிறுவனாக இருந்த நான் இல்லை. புரியவில்லை இல்லையா ?.

நீங்கள் ஒவ்வொரு நாளும் நிலக் கண்ணாடியில் உங்களை நீங்கள் பார்க்கிறீர்கள் பரவாயில்லை முன்னைய விட இப்போழுது நான் அழகாகவே இருக்கிறேன் என்று பார்த்து பெருமிதம் அடைகிறீகள் ஆனால் பல வருடங்களாக பார்க்காத உங்கள் நன்பர் அல்லது உறவினர்கள் உங்களை சந்திக்கிறபோது அவர்களைப் பார்த்து அல்லது அவர்கள் உங்களைப் பார்த்து செல்லக்கூடிய முதல் வார்த்தை என்ன முடியெல்லாம் நரைத்து விட்டது உடல் கூட தளர்ந்து விட்டதே என்று அப்படியா இருக்கேன் ?. அப்போதுதான் உங்களுக்கு தெரிய வருகிறது நமக்கு முடி நரைத்து விட்டது, உடல் தளர்ந்து விட்டது, முந்தைய இருந்த உடல் இப்போழுது இல்லை. உடனே முதுமை பற்றிய பயமும், மரண பயமும் உங்கள் உள்ளத்திலும் உடலிலும் படர ஆரம்பிக்கிறது.


உடல் என்பது ஆன்மா தான் வெளிப்படுத்திக் கொள்ள அணிந்துக் கொள்ளும் உடைதான் உடல். நீங்கள் எப்படி காலத்திற்கும் நேரத்திற்கும் உங்கள் மனம் விரும்பிய விதத்தில் உங்கள் ஆடையை தேர்வு செய்து அணிகிறீகளோ அதுபோல ஆன்மா அதன் காலத்திற்கும் நேரத்திற்கும் தனது மனம் ஓட்டத்திற்கு தோதுவாக தான் வளுவாகவும் தளர்வாகவும் உடலை அமைத்து கொண்டு அணிந்துக் கொள்கிறது. நல்ல புரிந்து கொள்ளுங்கள் நரை முடி, உடல் முதுமை ஆன்மாவின் அனுபவம்.

وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ مِنْ سُلٰلَةٍ مِّنْ طِيْنٍ‌ ‏
நிச்சயமாக (ஆரம்பத்தில் முதல்) மனிதரை களிமண்ணின் மூலச் சத்திலிருந்து படைத்தோம்.
(அல்குர்ஆன் : 23:12)

ثُمَّ جَعَلْنٰهُ نُطْفَةً فِىْ قَرَارٍ مَّكِيْنٍ‏
பின்னர், அதனை நாம் இந்திரியமாக்கி ஒரு பத்திரமான இடத்தில் வைத்தோம்.

ثُمَّ خَلَقْنَا النُّطْفَةَ عَلَقَةً فَخَلَقْنَا الْعَلَقَةَ مُضْغَةً فَخَلَقْنَا الْمُضْغَةَ عِظٰمًا فَكَسَوْنَا الْعِظٰمَ لَحْمًا ثُمَّ اَنْشَاْنٰهُ خَلْقًا اٰخَرَ‌ فَتَبٰـرَكَ اللّٰهُ اَحْسَنُ الْخٰلِقِيْنَ ‏
பின்னர், அந்த இந்திரியத்தை கருவாக ஆக்கினோம். பின்னர், அக்கருவை சிறிய சதைத் துண்டாக ஆக்கினோம். பின்னர், அந்த சிறிய சதைத் துண்டில் எலும்புகளை உருவாக்கினோம், அடுத்து அவ்வெலும்புகளுக்கு மேல் சதையை அமைத்தோம். பின்னர், அதனை (முழுமையான மனிதப்) படைப்பாக உருவாக்கினோம். படைப்பவர்களிலெல்லாம் மிக்க அழகானவனான அந்த அல்லாஹ் மிக பாக்கியம் பொருந்தியவன்.

هَلْ اَتٰى عَلَى الْاِنْسَانِ حِيْنٌ مِّنَ الدَّهْرِ لَمْ يَكُنْ شَيْـٴًـــا مَّذْكُوْرًا‏
மனிதன் மீது, அவன் குறிப்பிடத்தக்கதொரு பொருளாகவே இல்லாதிருந்த ஒரு நீண்ட காலகட்டம் செல்லவில்லையா?
(அல்குர்ஆன் : 76:1)

ثُمَّ اِنَّكُمْ بَعْدَ ذٰلِكَ لَمَيِّتُوْنَ‏
(மனிதர்களே!) இதற்குப் பின்னர், நிச்சயமாக நீங்கள் இறப்பவர்களே!
(அல்குர்ஆன் : 23:13,14,15)

உங்கள் வாழ்க்கை என்பது நீங்கள் முன்னோக்கி செல்கின்ற பயணம். அப்படியென்றால் எதை நோக்கிப் பயணம் ?. உருவமற்ற நிலையை நோக்கி பயணம். எதற்கெல்லாம் தொடக்கம் இருக்கிறதோ அதற்கெல்லாம் முடிவு உண்டு. ஒன்றும் மற்ற நிலையே உங்கள் தொடக்கம். அதனால் உங்கள் உடல் உயிர் மனம் ஆன்மா அனைத்தும் ஒன்றும் மற்ற நிலையே நோக்கி பயணித்து அடையும். இதற்கு பெயர்தான் "மரணம்".

الَّذِيْنَ اِذَآ اَصَابَتْهُمْ مُّصِيْبَةٌ ۙ قَالُوْٓا اِنَّا لِلّٰهِ وَاِنَّـآ اِلَيْهِ رٰجِعُوْنَ‏
(பொறுமை உடையோராகிய) அவர்களுக்குத் துன்பம் ஏற்படும் போது, “நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்” என்று கூறுவார்கள். (அல் குர்ஆன். 2:156)

இப்போது சொல்லுங்கள் உங்கள் ஏழு வயது சிறுவனாக இருந்த உடல் இப்போழுது இருக்கிறதா ?

அன்று இருந்த நான் இன்று இல்லை. அதனால் முடக்கம் எனது இல்லை. முன்னோக்கிய பயணமே எனது "நான்".

மௌலவி கலீfபா
அஹமது மீரான் சாஹிப்
உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
மேலப்பாளையம்
திருநெல்வேலி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails