Tuesday, March 16, 2010
பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்
தகவல் : அபூ பாத்திமா
ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள், ஆனால் விவாதங்களில் அவர்களால் வெல்ல முடிவதில்லை என்பது தற்போதைய ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
ஆண்களின் மூலையை விட பெண்களின் மூலை சிறியதாக இருந்தும் கூட பெண்களே பொதுவாக அதிகம் பேசக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்ற செய்தியை அமெரிக்காவின் பல்டமோர் நகரத்து பல்கலைக் கழக ஆராய்சியாளர்கள் வெளியிட்டுள்ளார்கள்.
ஆண் பெண் இருபாலாரின் சிறுமூலை பெருமூலை என்ற இருமூலைகளிலும் பேச்சில் ஈடுபடக்கூடிய பகுதிகளை அந்த ஆராய்சியாளர்கள் ஒத்துப் பார்த்தார்கள். அவ்விரு பகுதிகளிலும் பெண்களே அதிக அடர்த்தியான உயிரணுக்களைப் பெற்றிருந்தனர்.
பெண்கள் ஏன் அதிக பேசும் திறனை பெற்றிருக்கின்றனர் என்பதை விளக்க இந்த ஆராய்சி உதவுகிறது என்று தாமஸ் க்ளாபர் கூறினார்.
கல்வியாலும் சுற்றுப்புற சூழலை அமைக்கிற காரணிகளாலும் தான் ஆண்களை விட பெண்கள் அதிகம் பேசும் திறனை பெற்றனர் என்ற நம்பிக்கைக்கு இந்த ஆராய்சியின் முடிவுகள் சவால் விட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் விவாதம் என்று வந்து விடுமானால் பெண்கள் இரண்டாம் இடத்தைப் பிடிப்பதில் வல்லவர்கள். நூறு சதவிதம் சரியான பக்கத்தில் இருந்து கொண்டு பெண்கள் விவாதம் புரிந்தாலும் அவர்கள் கிட்டத்தட்ட எப்போதும் தவறான பக்கத்தில் இருப்பதாகவே பிறரால் பார்க்கப்படுகிறார்கள் என்பதை ஒரு ஆராய்சி உறுதி செய்கிறது.
தங்களிடம் எதிர்வாதம் புரியும்படி ஆண்களை தூண்டிவிடுகிற போதெல்லாம் பெண்கள் வாதம் புரிய தயாராகி விடுவார்கள், தான் உணர்சி வசப்பட்டு விட்டதாக தங்களுக்கு தாங்களே ஒரு சாயத்தைப் பூசிக் கொண்டு வாதத்தை நிறுத்திக் கொள்வார்கள்.
பிரிட்டானிய மனநோய் மருத்துவர் டாக்டர் எலிசபெத் மேப்ஸ்டோன் என்பவர் குறிப்பாக 600 நடுத்தர வகுப்பைச் சார்ந்த ஆண்களையும் பெண்களையும் அவ்விரு பாலாருக்கும் இடையே நடக்கக் கூடிய வாய்த்தகராறுகளை டைரியில்; எழுதிக் கொண்டு வருமாறு கேட்டுக் கொண்டார். 15 வருடங்களாக அந்த தகராறில் பயன்படுத்திய வார்த்தைகளை அவர் ஆராய்ந்து வருகிறார்.
நியாயமாகவும் காரணத்தோடும் நடப்பதாக தங்களைத் தாங்களே நினைத்துக் கொண்டிருக்கிற ஆண்கள், கோபம், அச்சம் இது போன்ற மற்ற உணர்வுகளுக்கும் எளிதில் ஆளாகக் கூடியவர்களாக பெண்களை நடத்துகிறார்கள் என்று எலிசபெத் கூறுகிறார்.
பெண்கள் ஆண்களோடு செய்யும் விவாதங்களில் உணர்வுபூர்வமான அறிவுப்பூர்வமற்ற தங்களது கருத்துக்களை எடுத்து வைக்க முயற்சிக்கும் போது திணறிப் போய் விடுகிறார்கள், அதனாலேயே அவர்களது வாதம் எடுபடாமல் போய் விடுகிறது.
நன்றி http://www.islamiyadawa.com/women/index.htm
பெண்களைப் புரிந்து கொள்ளுங்கள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment