Monday, March 1, 2010

மனநோயும் சிகிச்சையும்


கேள்வி : ஒரு முஃமின் மனநோய்க்கு உள்ளாக வாய்ப்பிருக்கிறதா? அவ்வாறு ஏற்பட்டால் சிகிச்சை செய்வது எவ்வாறு?
ஃபத்வா: ஒரு மனிதன் கடந்த காலத்தை எண்ணிக் கைசேதப்படுவதானாலும் எதிர்காலம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்வதானாலும் மனநோய்க்கு உள்ளாகிறான்.
உடலில் ஏற்படுகின்ற நோய்களை விட உள நோய் அதிகம் பாதிப்பை உண்ணுபண்ணுகிறது.
இதற்கு பௌதீக ரீதியான சிகிச்சைகளை விட ஆன்மீக ரீதியான சிகிச்சையே அதிகம வெற்றியளிக்கக் கூடியது.
கவலை, துக்கம், கைசேதம் போன்றவற்றிற்கு உள்ளாகும் ஒரு முஃமின் பின்வரும் துஆவை ஒதினால் அவையனைத்தும் அகன்று விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அஹ்மது)
அல்லாஹும்ம இன்னீ அப்துக்க, வப்னு அப்திக்க, வப்னு அமதிக்க, நாஸியத்தீ பிஎதிக்க, மாலின் பிய்ய ஹுக்முக்க, அதுலுன் பிய்ய கலாவுக்க, அஸ்அலுக்க பிகுல்லி இஸ்மின் ஹுவ லக, சம்மைத்த பிஹி நப்ஸக்க, அவ் அன்சல்தஹு பீ கிதாபிக அவ் அல்லம்தஹு அஹதன் மின் ஹல்கிக, அவ் இஸ்தஃதர்த்த பிஹி பீ இல்மில் கைபி இன்தக, அன் தஜ்அலல் குர்ஆனல் அலீம ரபீஅ கல்பீ, வநூர சதுரீ, வஜலாஅ ஹுஸ்னீ, வதிஹாப ஹம்மீ வகம்மீ.
(பொருள்: யா அல்லாஹ்! நான் உன் அடிமை. உன் அடிமைகளான ஓர் ஆண் – ஒரு பெண்ணின் மகனாவேன். எனது குடும்பி உனது கையில் இருக்கிறது. என்னில் உனது கட்டளையே செல்லுபடியாகிறது. என் விஷயத்தில் உன் தீர்ப்பு நீதமானது. உனக்குச் சொந்தமான ஒவ்வொரு திருப்பெயர் கொண்டும் நான் உன்னிடம் யாசிக்கிறேன். அந்தப் பெயரை நீயே உனக்குச் சூட்டியிருப்பாய். அல்லது உனது வேதத்தில் அதை நீ அருளியிருப்பாய். அல்லது உனது படைப்புகளில் எவருக்கேனும் அதைக் கற்றுக் கொடுத்திருப்பாய். அல்லது மறைவானவை பற்றிய ஞானத்தில் உன்னிடத்தில் அதை வைத்திருப்பாய். (அவை அனைத்தைக் கொண்டும் உன்னிடம் கேட்கிறேன்.) அல்குர்ஆனை என் இதயத்தின் வசந்தமாக்குவாயாக! என் நெஞ்சத்தின் ஒளியாக்குவாயாக! எனது துயரத்தை நீக்கக்கூடியதாகவும் எனது கவலையை மறைக்கக் கூடியதாகவும் ஆக்குவாயாக!)
இது மனநோய்க்கான ஓர் ஆன்மீக மருந்தாகும்.
இது போன்ற இன்னும் பல துஆக்களை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்கிறாhகள். அவற்றை ஸஹீஹான துஆ புத்தகங்களில் காணலாம்.
எனினும் இன்று ஆன்மீக மருத்துவத்தை மக்கள் அலட்சியப்படுத்துவதற்கு ஈமான் பலவீனமடைந்ததே காரணமாகும். இதனால் பௌதீக மருத்துவத்தில் அதிகம் தங்கியிருக்க ஆரம்பித்து விட்டனர்.
ஈமான் உறுதியாக இருந்தால் ஆன்மீக ரீதியான மருத்துவம் அதிகம் தாக்கம் கொடுக்கக் கூடியதாகவும் விரைவில் சுகத்தை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் சில தோழர்களை ஒரு பயணம் அனுப்பி வைத்தார்கள். அத்தோழர்கள் செல்கிற வழியில் ஒரு கிராமத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அவ்வேளை அந்த ஊர் மக்கள் இவர்களிடம் வந்து தமது தலைவருக்கு ஏதோ விஷஜந்து தீண்டி விட்டதாகவும் அதற்கு மந்திரிக்குமாறும் வேண்டிக் கொண்டனர். ஸஹாபாக்களில் ஒருவர் முன்வந்து சூரத்துல் ஃபாத்திஹாவை ஓதி மந்திரித்தார். அவருக்கு உடனே குணம் கிடைத்தது. (ஹதீஸின் சுருக்கம் – புகாரி)
சூரத்துல் ஃபாதிஹாவை ஓதியவர் நிறைவான ஈமானிய உணர்வுடன் ஓதினார். பயன் கிடைத்தது.
ஆனால் இன்று முஸ்லிம்களின் உள்ளங்களில் மார்க்கமும் ஈமானும் பலவீனமடைந்து விட்டது. மக்கள் வெளிப்படையான விஷயங்களில் மாத்திரம் தங்கியிருக்கிற நிலை தோன்றியுள்ளது. இதனால்தான் இத்தனை சோதனைகள்!
அதே வேளை இந்தக் கூட்டத்திற்கு நேர் எதிராக ஒரு கூட்டம் உருவாகி மந்திரம் வைத்தியம் என்ற பெயரில் மனித மனங்களோடும் அவர்களது பொருளாதாரத்தோடும் விளையாடுவதைக் காண முடிகிறது. இவர்கள் உண்மையான மருத்துவர்களோ நபிவழியில் மந்திரிக்கக்கூடியவர்களோ அல்லர். மாறாக இவர்கள் மக்களின் பணத்தை அனியாயமாகச் சாப்பிடுபவர்கள்.
ஆக, ஆன்மீக மருத்துவத்தை ஒரு கூட்டம் ஒதுக்கித் தள்ள இன்னுமொரு கூட்டம் அதைவைத்து தொழில் செய்யவும் ஏமாற்றவும் செய்கிறது. இந்த இரண்டு நிலைக்கும் நடுவே இருக்கக் கூடியவர்களே உண்மை முஸ்லிம்கள்.

http://islamthalam.wordpress.com

1 comment:

புல்லாங்குழல் said...

நல்ல பதிவு.உங்கள் கருத்தை நான் ஆமோதிக்க்ன்றேன்.

LinkWithin

Related Posts with Thumbnails