Wednesday, February 1, 2012

நீடூர்-நெய்வாசல் அழகான ஜாமிஆ மஸ்ஜித் (பழய பள்ளிவாசல்)




மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும்.
2:45 அல்-குர்ஆன்

"மெய்யாக என்னுடைய தொழுகையும், என்னுடைய குர்பானியும், என்னுடைய வாழ்வும், என்னுடைய மரணமும் எல்லாமே அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். அல்-குர்ஆன் 6:162

நபி(ஸல்) தனது மரண வேளையில்கூட "தொழுகை! தொழுகை!" என கூறிக் கொண்டிருந்தார்கள். (அறிவிப்பவர் : உம்மு ஸலமா-ரலி, நூல் : இப்னுமாஜா)

 பள்ளிவாசலுக்குள் உலக விஷயங்கள் பற்றியோ அல்லது வேறு காரியங்கள் குறித்தோ பேச வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால், நபிகள் நாயகம் நெருப்பை மிதித்தது போன்ற உணர்வை அடைவார்கள்.
பள்ளிவாசலை விட்டு உடனே வெளியேறி, பேச வேண்டியதை வெளியில் வைத்து பேசிவிட்டு, மீண்டும் பள்ளிவாசலுக்குள் நுழைவார்கள்.

நபி வழியின் அடிப்படையில் நம்முடைய கண் குளிர்ச்சி தொழுகையில் இருக்க வேண்டும். நாம் தொழும்பொழுது எவ்வளவு மன நிம்மதி.இன்னும், நாம் அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளை நம்முடைய தொழுகையால் அலங்கரிப்போம். நமக்கு நற்கூலி வழங்க அல்லாஹ் போதுமானவன் !

பழைய பள்ளிவாசளின் படம் இனிய சிறு வயது வாழ்கை மற்றும் இளமைக் கால நினைவுகளை தூண்டி விடுகின்றது . பாரிசில் பழங்கால கட்டிடங்களை பொக்கிசமாக பாதுகாக்கின்றனர் . பழைய பள்ளிவாசளை புதிப்பித்து, சரிபார்த்து மற்ற மார்க்க காரியதிற்காவது உபயோகத்திற்கு வைத்து புதிய பள்ளிவாசளை வேறு இடத்தில கட்டிருக்கலாம் என்று நினைக்க வைக்கின்றது. முடிந்த கதையானாலும் மனதில் ஓடும் சபலம்.அதனை தடை செய்ய முடியாது.
 எல்லாம் நன்மைக்கே .அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படிதான் நடக்கும்.

1 comment:

vadakaraithariq said...

அஸ்ஸலாமுஅலைக்கும் அண்ணா, பழைய மஸ்ஜிதின் புகைப்படங்கள் அருமையாக இருக்கு.

LinkWithin

Related Posts with Thumbnails