Monday, February 20, 2012

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்!




ஏய் எத்தனையோ சித்தனுங்க கத்தியாச்சு
கத்தி கத்தி தொண்டை தண்ணி வத்தியாச்சு
சுத்தமாக சொன்ன தெல்லாம் போதலியா
மொத்தமாக காதுல தான் ஏறலியா

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்
நல்லவங்க எம்மதமோ ஆண்டவன் அந்த மதம்.


அட போங்கடா போங்கடா போங்கடா
பொல்லாத பூசலும் ஏசலும் ஏனடா
கூட வாங்கடா வாங்கடா வாங்கடா
சொல்லாத சங்கதி சொல்லுறன் கேளுடா
அந்த ஆன்டவன் தான் கிருஸ்துவனா முஸ்லிமா இல்லை இந்துவா

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்.....

மனசுக்குள்ள நாய்களும் நரிகளும்
நால்வை பேய்களும் நாட்டியமாடுதடா
மனிதனென்னும் போர்வையிலிருக்குது
பார்வையில் நடக்குது நான் கண்ட மிருகமடா

அட யாரும் திருந்தலையே இதுக்காக வருந்தலையே

நீயும் நானும் ஒன்னு இது நெசந்தான் மனசுல என்னு
பொய்யையும் புரட்டையும் கொன்னு இந்த பூமிய புதுசா பன்னு

சும்மா சொன்னத சொன்னத சொல்லவா
சொல்லாமல் என் வழி என் வழி செல்லவா
அட உன்னதா நம்புறன் நல்லவா
உன்னால மாறுதல் வந்திடுமல்லவா

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்......

கணக்கிலொரு கூட்டலும் கழித்தலும்
வகுத்தலும் பெருக்கலும் இருப்பது உண்மையடா
கூட்டல் மட்டும் வாழ்க்கையில் நடக்குது
பாவத்தை பெருக்குது இது என்ன ஜென்மமடா

இப்ப புதுசா கணக்கெழுது இங்கு வரட்டும் நல்ல பொழுது

அடியே ஞானத்தங்கம் இங்கு நானொரு ஞானச்சிங்கம்
இதைப் பார்த்தா பொய்களும் ஓடும் இரண்டு போட்ட உலகமும் மாறும்

அட பத்திரம் பத்திரம் பத்திரம்
தீர்ப்பு நாள் பக்கத்தில் பக்கத்தில் வருது
இது சத்தியம் சத்தியம் சத்தியம்
சத்தியத்தின் சந்ததி சீக்கிரம் வருது

உன் மதமா என் மதமா ஆண்டவன் எந்த மதம்......

“ராமன் அப்துல்லா” படத்தில் இளையராஜா இசையில் நாகூர் ஹனிபா பாடிய மதநல்லிணக்கப்பாடல்

1 comment:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

மத வெறியை தடுக்க வைக்கும் கருத்துக்கள் அமைந்த பாடல். அருமை.

LinkWithin

Related Posts with Thumbnails