தமிழக முஸ்லிம்களின் பள்ளிக் கல்வி முறை
இஸ்லாமிய அடிப்படையில் அமைந்திட வேண்டும்; அதற்கு இஸ்லாமிய நர்சரி &
பிரைமரிப் பள்ளிக் கூடங்கள் ஊர்தோறும் உருவாக்கப்பட வேண்டும் என்பதுதான்
தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கத்தின் தலையாய நோக்கம்.
இன்ஷா அல்லாஹ்
2030க்குள் இதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டவேண்டும் என்பதற்காகவே
அல்லும்பகலும் அயராது உழைத்து வருகின்றோம். தமிழகம் முழுவதும்
தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கல்வி விழிப்புணர்வுக் கூட்டங்களின் முக்கிய
கருத்தாகவும் இதை வலியுறுத்தி வருகின்றோம்.
தற்கால நடைமுறையில் இஸ்லாமிய நர்சரி
& பிரைமரி பள்ளிக்கூடங்களை உருவாக்குவதில் சில நடைமுறைச் சிக்கல்கள்
உள்ளன. குறிப்பாக இஸ்லாமியப் பள்ளிகளில் பாடம் நடத்தும் சிறப்புத்
தகுதியைப் பெற்ற ஆசிரியைகள் இல்லாதது பெரும் தடையாக இருக்கிறது.
மார்க்க அறிவோடு ஆங்கில மொழிப் புலமைப்
பெற்ற ஆசிரியைகள்தான் இஸ்லாமிய நர்சரி & பிரைமரிப் பள்ளிகளில்
பணியாற்றத் தகுதியுடையவர்களாகிறார்கள். தற்போது மார்க்கம் கற்றுத் தர
ஆலிமா, ஆங்கிலம் கற்றுத்தர ஆங்கில ஆசிரியை என்று இரட்டைச் சுமைகளை தற்போதைய
இஸ்லாமிய பள்ளிகள் சுமக்கின்றன. பாடத்தில் மட்டுமல்லாமல் பயிற்றுவிப்பு
வழிமுறையிலும் கலாச்சார போதனை முறைகளிலும் பள்ளிக்கூடங்களை இன்றைய
காலத்திற்கு தகுந்தாற்போல இலாபகரமாக நிர்வகிப்பதிலும் கூட ஆசிரியை மற்றும்
அவர்களின் தகுதியில் பற்றாக்குறை நிலவுகிறது.
இந்த ஆரம்பப் பள்ளிக் கல்வி முழுக்க
முழுக்க பெண்கள் சார்ந்த துறையாகவே இருக்கிறது. நூறு விழுக்காடு
வேலைவாய்ப்புகள் நிறைந்த இந்தத் துறையில் நமது பெண்களை அதிகம் உருவாக்கிட
வேண்டும் என்பதற்காகத்தான் காரைக்காலில் அந்நிஸா அகாடமி என்ற உயர்கல்வி
நிறுவனம் அல் ஃபுர்கான் அறக்கட்டளை சார்பில் 19-06-2011 அன்று
உருவாக்கப்பட்டுள்ளது.
+2 முடிந்த மாணவிகளுக்காக மூன்றாம்
ஆண்டுப் பட்டப் படிப்பு B.I.S.Ed.(Bachelor of Islamic School Education)
என்ற படிப்பு இங்கு கற்றுத் தரப்படுகிறது. அதில் ஆலிமா படிப்பு பி.ஏ.,
ஆங்கிலம் (அழகப்பா பல்கலைக்கழகம்) ஆசிரியர் பயிற்சி பட்டயப் படிப்பு,
இயற்கை வைத்தியம், இஸ்லாமிய பயிற்றுவிப்பு முறை போன்றவற்றோடு அரபு மொழி,
ஆங்கில மொழி சிறப்புப் பேச்சுப் பயிற்சி கொடுக்கப்பட்டு உருவாக்கப்பட
உள்ளனர்.
தரமான உணவு பாதுகாப்பான தங்கும்
வசதிகளோடு முதுநிலை மற்றும் முனைவர் பட்டம் பெற்ற ஆசிரியைகளின் நுணுக்கமான
பயிற்சியும் அளிக்கப்பட உள்ளன.
இந்நிறுவனத்தில் பயின்று பட்டம் பெறும்
பெண்கள் தங்கள் பகுதிகளில் ஒரு இஸ்லாமியப் பள்ளியைத் துவக்கி இலாபகரமாக
நடத்தும் திறன் பெற்றவர்களாக உருவாக்கப்படுவார்கள்.
மேலும், இவர்களுக்கு மேற்படிப்பு
படிக்கவும், ஆசிரியைப் பணி, அரசுப் பணி, இயற்கை மருத்துவர் போன்றத்
துறைகளில் வேலைவாய்ப்புகள் நூறு விழுக்காடு உறுதி செய்யப்படுகின்றன.
இந்த அரிய வாய்ப்பை முஸ்லிம் சமுதாயப்
பெண்கள் பயன்படுத்திக் கொண்டு பயனுள்ள கல்வியைத் தானும் கற்று, பிறருக்கும்
கற்றுக் கொடுத்து சமுதாயத்தில் கல்வி மறுமலர்ச்சியில் பங்காற்றிட
வேண்டும்.
மாணவிகள் சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
இன்ஷா அல்லாஹ் 2030க்குள் இதில்
குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டவேண்டும் என்பதற்காகவே அல்லும்பகலும்
அயராது உழைத்து வருகின்றோம். தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக நடைபெற்று
வரும் கல்வி விழிப்புணர்வுக் கூட்டங்களின் முக்கிய கருத்தாகவும் இதை
வலியுறுத்தி வருகின்றோம்.மாணவிகள் சேர்ப்பு தற்போது நடைபெற்று வருகிறது.
Source : http://www.samooganeethi.org/
No comments:
Post a Comment