Monday, February 13, 2012

ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா!

"ஆயிரம் ஆனாலும் மாயவரம் ஆகுமா" என்பது பழமொழி . மாயவரம் மறந்து மறைந்து போக முயலும் நிலை.
"மயூரபுரி"  மாயவரமாகி, மாயவரம் மாயூரமாக மாறி தற்போது மயிலாடுதுறையாக வந்து அரசியல்வாதிகளின் அலட்சியப் போக்கினால் முன்னேற்ற நடைபோட முடியாமல் தடுமாறுகின்றது .
   மயில்கள் ஆடியதால் மயிலாடுதுறை என்று பெயர் பெற்றது என்றும் சொல்வார்கள். தமிழின் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய வேதநாயகம் பிள்ளை அவர்கள் மாயவரம் மாவட்ட முனிசீப்பாக 13 ஆண்டுகள் பணி செய்தார்கள். திரு .கிட்டப்பாவின் முயற்சியால் மாயூரம் என்ற பெயர் மயிலாடுதுறை என்று மாற்றப்பட்டது. 
 
  தஞ்சை மாவட்டத்தில்  மயிலாடுதுறை (Mayiladuthurai) புகைவண்டி நிலையம் மிகவும் பெரியதாகவும் அகாகவும் அமைக்கப்பட்ட அருமையான பல புகைவண்டிகள்  சந்திக்கும் நிலையம்  
   
   தஞ்சை மாவட்டம் நிர்வாக வசதிக்காக பிரிக்கும் பொழுதெல்லாம் மயிலாடுதுறை ஒரு தனி மாவட்டமாக மாறும் என்று பலர் மிகவும் ஆவலோடு இருந்தனர். அரசியல் விளையாடி அது நாகப்பட்டினத்திற்கும்  திருவாரூருக்கும் வாய்ப்பாகிவிட்டது.  திருவாரூருக்கும் நாகப்பட்டினத்திற்கும்24 கி.மீ.தான்.
இவைகளுக்கு
மாவட்ட அதிகாரம் (அந்தஸ்து). 
பலவகையிலும் நடு நாயகமாக இருக்கும்,எல்லோரும்  எளிதில் வரும் வசதியுடைய மயிலாடுதுறைக்கு மாவட்ட அதிகாரம் (அந்தஸ்து) கொடுக்கப்படாமல் இருப்பது மிகவும் வேதனையானது. மயிலாடுதுறை மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறை வேறாமல் ஆட்சியாளர்களின் அலட்சியத்தினால் தடுக்கப்படுகின்றது. அதற்கு முக்கிய காரணம் ஆளும் கட்சி வேட்பாளர்கள்  மயிலாடுதுறை தொகுதியிலிருந்து  நெடுங்காலமாக தேர்வு செய்யப்படாமல் போனதுதான்.  
இப்பொழுது உள்ள அரசாவது மயிலாடுதுறையை  மாவட்டமாக ஆக்க முயலட்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள்  மயிலாடுதுறையை தனி மாவட்டமாக ஆக்க வாய்ப்புகள் உண்டா?: உயர் நீதிமன்றம்!

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails